Wednesday, December 31, 2008

விஷிங் யு எ

தமிழ்க்கடவுள்
முருகன் கோவிலில்
நீண்ட வரிசை
ஜனவரி 1.
- நெல்லை கண்ணன்.

---

Tuesday, December 23, 2008

அறிவாளி :

ATM இயந்தரத்தின் முன் நின்று கொண்டு:

நண்பர் 1 : உன் பாஸ் வோர்டு எனக்கு தெரிஞ்சு போய்டுச்சு
நண்பர் 2 : என்ன அது
நண்பர் 1 : (நாலு ஸ்டார் ) ****
நண்பர் 2 : இல்ல தப்பு அது 7172
நண்பர் 1 : ???!!!


---

Thursday, December 18, 2008

பேசுவது பேசாமை

பேசினால் என்ன என்று நான் கேட்க,
பேசினால் தானா என்று நீ கேட்க,
கரைவது காலம் மட்டுமல்ல,
என் காதலும் தான்.


---

Wednesday, December 17, 2008

ஆசை

பற்றி எரிகிற மரத்தில் பறவைகள் வாழ முடியாது ,
அதே போல ஆசை அதிகம் உள்ள மனதில் உண்மை இருக்காது.

--புத்தர்.

---

அழுவதும் , சிரிப்பதும் :

அழும் பொது தனியாக அழு ,
சிரிக்கும் போது கூட்டத்தில் சிரி,

கூட்டத்தில் அழுதால் நடிக்கிறான் என்பார்கள்!
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

--கண்ணதாசன்.

---

பாதையல்ல நான் :

என் வாழ்க்கையை விட்டு
விலகி செல்ல நான்
உன் பாதையல்ல
உன் பாதங்கள்!

மூலம் : சூப்பர் நாவெல்.
ஆசிரியர் : தெரியவில்லை.

---

Question paperil கவிதை எழுதுவோர் சங்கம்.

நீ என்ன "சூப்பர் Figure a" உன்னை பார்த்தவுடன் ,
எல்லாமே மறந்து போகிறதே


-எக்ஸாம் ஹாலில் "Question Paper" ஐ பார்த்தவுடன் கவிதை எழுதுவோர் சங்கம்.



---

என்னை பிடிக்காதவர்கள் :

அவளுக்கும் என்னை பிடிக்கவில்லை,
எனக்கும் என்னை பிடிக்கவில்லை,
பின்பு இருவரும்
"என்னை" இல்லாமல் தோசை ஊற்றி சாப்பிட்டோம்.



---

எப்படி கூப்பிடுவார்கள்

நேர்முகத்தேர்வில் : உங்கள் பெயர் என்ன ?

ஆசாமி : கமல் !

தேர்வாளர் : வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க ?

ஆசாமி : கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க, தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க!

தேர்வாளர் : ???!!!



---

தேவதாசின் வரிகள் 1:

அவள் முத்தம் கொடுத்து விட்டு போன இந்த கன்னத்தில்
வேறு யாரும் முத்தமிட கூடாது என்பதற்க்காக தான்
இந்த முள்வேலி, தாடி



---

அழவைக்கும் உண்மை

பலரை அழவைக்கும் உன்ன்மையை விட,
சிலரை சிரிக்க வைக்கும் உண்மையே மேலானது


எ.கா: நீங்க ரூம்ப அழகா இருக்கீங்க

---

பெற்றோர் பையன்களிடம் கேட்க கூடாத கேள்விகள்:

உங்கள் பெற்றோர் உங்களிடம் இந்த ஐந்து கேள்விகள் கேட்டால் உங்களுக்கு கோபம் கண்டிப்பாக வரும் (பையன்களிடம் ).

1. ஏன் லேட் ?
2. எதுக்கு உனக்கு பணம் (அல்லது) எதுக்கு அவ்வளவு பணம்?
3. ஏன் இவ்வழு நேரம் போன் பேசுறே ?
4. ஏன் இப்படி ஊர சுத்துற?
5.ஏன் பக்கத்து வீட்டு பையன் மாதிரி உன்னால மார்க் எடுக்க முடியலே?



---

அமெரிக்கா போக நினைப்பு:

நண்பர் 1 : அமெரிக்கா போகலாம்னு நெனைக்கிறேன் எவ்வளவு செலவாகும் ?

நண்பர் 2 : போக நினைக்கறதுக்கு எல்லாம் செலவு ஆகாது!.

நண்பர் 1 :???!!!


---

காதல் ஓவியம்

நீ வரைந்த ஓவியத்தில் பேரழகாய் தெரிந்தது
ஓரத்தில் இருந்த உன் பெயர்

---

வாழ்வாதாரம்

ஒரு நாள் உனக்கும் எனக்கும் விவாதம் வந்தது ,
நீ கேட்டாய் உனக்கு நான் முக்கியமா , உன் வாழ்க்கை முக்கியமா என்று
நான் சொன்னேன் என் வாழ்க்கை தான் முக்கியம் என்று , அதற்கு நீ கோபித்து கொண்டு போய் விட்டாய் ,
என் வாழ்க்கையே நீ தான் என்பதை சொல்ல அவகாசம் தரவில்லை நீ எனக்கு


---

நீ, நான், நமது விதி :

நீ, நான், நமது விதி
மூவரும் வாழ்க்கை ஓட்டபந்தயத்தில்
ஓடி கொண்டிருக்கிறோம் ,
உன்னை வெற்றி பெற வைக்க நானும்,
என்னை வெற்றி பெற வைக்க நீயும்,
விட்டு கொடுத்து ஓடி கொண்டிருக்க,
நம்மை வென்றது விதி.


---

முக தரிசனம்:

நீ ஒரு முறை என்னை பார்க்க ,

ஆயிரம் முறை கண்ணாடியை பார்க்கிறேன்.


---

வெயிலின் அருமை

அவன் நேசித்தான் ,
அவள் நேசிக்கவில்லை ,
இன்றோ அவள் நேசிக்கிறாள்
அவனோ சுவாசிக்கவில்லை.


---

மருந்தே என்றாலும் :

அருகம்புல் சாறு ஒரு சிறந்த மருந்து தான் , ஆனால் நான் அதை அருந்த மாட்டேன் என் என்றால்

------------------------------------
------------------------------------
------------------------------------
------------------------------------
------------------------------------

புலி பசித்தாலும் புல்லை தின்னாது!


---

Tuesday, December 16, 2008

தத்துவம் 1013

மனசுக்கு பிடிச்சவங்க முன்னாடி அழுவதும் கஷ்டம் ,
பிடிக்கதவங்களுக்கு முன்னாடி சிரிப்பதும் கஷ்டம்.


---

அழும் குழந்தை:

கணவன் : குழந்தை அழுதுகின்னு இருக்கு அத கவனிக்காம நீ டிவி ல சீரியல் பார்க்குறே ?

மனைவி : நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுவுது!

கணவன் :???!!!.


---

Monday, December 15, 2008

பெண்ணியமும் ஆணியமும் ?

பெண்ணியமும் ஆணியமும் (அப்படி ஒன்று இருக்கிறதா )?.

பெண்ணியம் பேசும் சகோதிரிகள் மன்னிக்க , நகைச்சுவை என்ற அளவில் மட்டும் எடுத்து கொள்க :)

ஒரு பெண் அழும் போது: இந்த உலகமே அவளை தேற்றும்.

ஆண் அழும் போது : இந்த உலகம் அவனை பார்த்து "பெண்பிள்ளை போல அழாதே என்று இகழும்".

-

ஒரு பெண் ஆணை அறையும் போது : நிச்சயம் அவன் எதோ தவறாக செய்திருக்கிறான்.

ஒரு ஆண் பெண்ணை அறையும் போது : "பெண்களை மதிக்க தெரியாதவன்" என்று பெயர் தான் மிஞ்சும்.

-

பெண் ஆண்களுடன் பேசிக்கொண்டிந்தால்: "அவள் எப்படி எல்லோரிடமும் நட்பாக பழகுகிறாள் ".

ஆண் பெண்களுடன் பேசிக்கொண்டிந்தால்: "சரியான ஜொள்ளு கேஸ் ".

-

பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டால் : "மற்றவர்கள் செய்த தவறு".

ஆணுக்கு விபத்து ஏற்பட்டால் : "வண்டிய ஒழுங்கா ஓட்ட தெரியலே".



---

தலைவனாவதற்கு முதற் படி

கேள்வி : நல்ல தலைவன் ஆவதற்கு முதல் படி என்ன?.

சுஜாதா : இது மாதிரி கேள்வி கேட்பதை நிறுத்துவது.


---

Sunday, December 14, 2008

தத்துவம் 1012:

மனதை திறந்து பேசு ,
மனதில் பட்டதையெல்லாம் பேசாதே.


---

ஒரு நண்பனின் புலம்பல் :

நண்பன் மீது கோபம் கொள் அவன் புரிந்து கொள்வான்,
காதலி மீது கோபம் கொள்ளாதே அவள் புரியாமல் கொல்வாள்


---

முதியோரின் இல்லம்:

முதியோர் இல்லத்தில் தான்
இருக்க வேண்டும்
"முதியோர் இல்லத்தில்" அல்ல!.


---

Saturday, December 13, 2008

பெரிய படிப்பு

ஒருவர் : என் பொண்ணு ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டா.

மற்றொருவர் : சந்தோசம், மேற்கொண்டு என்ன படிக்க வைக்க போறீங்க ?

ஒருவர் : செகண்ட் கிளாஸ் படிக்க வைக்க போறேன்.

மற்றொருவர் : ???!!!.


---

அசைவ மதிப்பெண்

மாணவன் : சார் பேப்பர் ல மார்க் போடும் போது முட்டை போட்டுடாதீங்க .

ஆசிரியர் : ஏன்டா ?

மாணவன் : ஏங்க அப்பா ஐயப்ப சாமிக்கு மாலை போட்டிருக்கார்

ஆசிரியர் : ???!!!


---

பலவீனமான பெண்

கேள்வி : ஒரு பெண் எப்போது பலவீனமடைகிறாள்?

சுஜாதா : அவள் கண்ணாடியை பார்க்கும் போது.


---

அதிகார குறள்

ஆசிரியர் : திருவள்ளுவர் 1330 குறளையும் 133 அதிகாரமாய் எழுதி வைத்திருக்கறார்.

மாணவன் : என் சார் அவர் அதிகாரமா எழுதி வைத்திருக்கிறார் கொஞ்சம் அன்பா எழுதுனா நல்லா இருந்திருக்குமில்ல.

ஆசிரியர் : ???!!!


---

மாமனார் சொல்லே

மனைவி : ஏங்க என் மேல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறீங்க ?

கணவன் : உங்க அப்பா தான் என்கிட்டே உன்ன பூ போல பார்த்து கொள்ள சொன்னார் அதான்

மனைவி : ???!!!



---

Friday, December 12, 2008

தத்துவம் 1011:

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.


---

கடவுளின் கவனத்திற்கு :

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'


---

அறிவும், மனசும் :

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும் கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.


---

அறிவுரை :

நண்பன் 1: நான் எது செஞ்சாலும் என் மனைவி குறுக்கே நிக்கிறா.

நண்பன் 2: கார் ஓட்டிப் பாரேன்.

நண்பன் 1: ????!!!!
---

நட்பாராய்தல்

நம்ம நட்புக்கு நல்ல ரெண்டு உதாரணம்.

தளபதி படத்துல நீ ரஜினின்னா நான் மம்முட்டி
பிதாமகன்ல நீ விக்ரம்னா நான் சூர்யா.

என்ன பாக்கறே?

எப்பவுமே நான்தான்டா முதலில் சாகணும், என் நண்பா.

No No அழக்கூடாது Control yourself.


---

எண்ணி துணிக

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.


---

ராஜேஷ் குமார் பதில்

க்ரைம் நாவெல் இல் ஒரு கேள்வி க்கு திரு. ராஜேஷ் குமார் அவர்கள் கொடுத்த பதில்:

கே : ஒரு புதுக்கவிதை ப்ளீஸ்

ப : தன்னை எரித்து
தனக்கு ஒளி கொடுத்த
தீக்குச்சியை எண்ணி
அழுகிறதோ மெழுகுவர்த்தி ?



அடியேனுடைய ஒட்டு


அப்படி தானும் சோகத்தில்,
உடல் எரிந்து அழிந்து போகின்றதோ?




---

பழமொழிகளும் அதன் நிஜமான அர்த்தங்களும்

வழக்கில் உள்ளது : "சேலை கட்டிய பெண்களை நம்பாதே!"

சரியான பதம் : " சேல் அகற்றிய பெண்களை நம்பாதே!"

"சேல் (அச்சம், மடம், நாணம் ) இவ்வற்றை அகற்றிய பெண்களை நம்பாதே" என்பது தான் சரியான அர்த்தம்.

வழக்கில் உள்ளது : "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!"

சரியான பதம் : "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!"

ஆற்றில் சில சமயம் சுழல் ஏற்படும் போது நடுவில் மண்ணை சிலசமயம் நெல் குதிர் போல குவித்துவிடும் ஆனால் அந்த மண் புதைமணல் போல உள்ளே இழுக்கும் தன்மை உடையது அதனால் அதை நம்பி ஆற்றில் இறங்காதே என்று பொருள்.



வழக்கில் உள்ளது : "ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து"

சரியான பதம் : "ஆயிரம் தடவை போய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து"


---

இன்றைய ஷாஜகான்கள்.

மனைவியிடம் வரதட்சணை
வாங்கி வாங்கியே
தாஜ் மகால் கட்டுகிறாகள்
இன்றைய
ஷாஜகான்கள்.


---

தெய்வ டாக்டர்

நோயாளி : டாக்டர் நீங்க தெய்வம் மாதிரி!.

டாக்டர் : அப்படி எல்லாம் பிரிச்சு பேச கூடாது நாளைக்கு ஆபரேஷன் முடிச்துன்னா நீங்களும் தெய்வம் ஆகி விடுவீங்க!

நோயாளி : ???!!!!!



---

ஆட்டோ வாசகம்

தெருவில் கண்டவளை நேசிப்பதை விட,
கருவில் சுமந்தவளை நேசி.


---

நேசிப்பில் முதலிடம்

உன் முதல் சிரிப்பையும்,
முதல் அழுகையையும்
முதலில் ரசித்தவள்
உன் அம்மா,
எனவே நேசிப்பவர்கள் பட்டியலில்
தாயை முதலில் வையுங்கள்.


---

டக்ளஸ் தத்துவம் (இன்பம், துன்பம்)

யாரால் துன்பத்தை அதிகமாக அனுபவிக்க முடியுமோ,
அவரால் தான் சிறப்பான இன்பத்தையும் காண முடியும்.


---

Thursday, December 11, 2008

பூட்டிய தபால் பெட்டி

ஒருவர் : ஏன் உங்க பையன இப்படி அடிக்கிறீங்க ?

மற்றொருவர் : லெட்டர் அ போஸ்ட் செய்ய சொன்னா போயிட்டு தபால் பெட்டி ( போஸ்ட் பாக்ஸ் ) பூட்டி இருக்குன்னு திரும்பி வந்துடான்.

ஒருவர் : ???!!!.



---

மாறிய சிலபஸ்

டீச்சர் : ஏன்டா போன வருஷம் வேற பொண்ணோட சுத்துன , இந்த வருஷம் வேற பொண்ணோட சுத்துற?

மாணவன் : சிலபஸ் (Syllabus) மாறி போச்சு மேடம்

டீச்சர் : ???!!!


---

தாகம்

என் இறப்பிற்கு பின் என் தாகத்தை
தணிப்பது எது தெரியுமா

தண்ணீர் அல்ல ,
என் கல்லறை மீது நீ சிந்தும்
ஒரு துளி
கண்ணீர் தான்.



---

சேர்ந்திருத்தல்

நீ என்னை விட்டு பிரியும் போதெல்லாம்,
நான் தனியாக பேசிக்கொள்கிறேன்
என் நிழலுடன் அல்ல,
உன் நினைவுகளுடன்!!!



---

பிரிந்திருத்தல்

குமுதத்தில் எப்போதோ படித்தது

தொலைபேசியில் பேச்சென்ன பாடே பாடு,
கடிதத்தில் வரிகள் என்ன காப்பியமே எழுது,
எல்லாவற்றையும் அனுபவிக்கிறேன்,
ஆனால் நேரில் மட்டுமே வந்து விடாதே,
ஏன் என்றால் சந்தித்து விட்டு நீ கிளம்பும்
மற்றுமொரு பிரிவை என்னால் தாங்கவே முடியாது!!!...


---


தமிழ் சினிமாவின் மாறாத விஷயங்கள்:

சும்மா இருக்க பிடிக்காமல் இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் பரிசல்காரனை பார்க்க நேர்ந்தது அதில் அவர் சினிமாவில் மாற்ற முடியாத விஷயங்களை பட்டியலிடிருந்தார்,

இதோ எனக்கு தோன்றிய புள்ளிகள் (அதாங்க points). சிலவற்றை குமுதத்தில் படித்ததாக ஞாபகம்.

இந்த விஷயம் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்த சில பல சினிமாக்களுக்கு பொருந்தாது

1. கதாநாயகன் நாயகி (கள் !) கூட தெருவில் பாடி ஆடும் போது வில்லனின் ஆட்கள் கும்பலின் வெளியே பின்னால் கத்தியை வெளியே தெரியும் படி வைத்து கொண்டு காத்திருப்பார்கள்.இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.

2. ஹீரோ அடிக்கும் ஒரே அடியில் வானத்திலேயே நான்கு ஐந்து முறை பல்டி அடித்து வில்லனோ அவன் ஆட்களோ விழுவார்கள். ஆனால் எந்த ஹீரோவும் அப்படி அடிவாங்கி சுற்ற மாட்டார்.

3. ஹீரோயின் கூட வரும் நண்பிகள் ஹீரோயினை விட அழகு குறைந்தவர்களாக தான் இருப்பார்கள் (லாஜிக்).

4. ஹீரோ தன் ஒரே தங்கையின் மீது ரொம்ப பாசமாக இருப்பது போல் காட்டினால், பாவம் அவளை வில்லன் கொலையோ கற்பழிப்போ
செய்து விடுவான் . (பழி வாங்குவதற்கு காரணம் வேண்டாமா).

5. கார் சேசிங் சீன் (Car chasing scene) இல் கார் ஓட்டுபவர் தேவை இல்லாமல் ஸ்ட்ரீஇங் (Steering) ஐ இப்படி அப்படி சுற்றி கொண்டே இருப்பார் ( நாங்க நிஜமாவே கார் ஒட்டுரோமில்லே).

6. ஹீரோ வரும் வரை பயந்து கொண்டிருக்கும் ஹீரோவை சார்ந்தவர்கள் climax இல் சட்டென வீரம் வந்து அவர்கள் பங்கிற்கு தானும் வில்லனின் ஆட்களுடன் சண்டை போடுவார்கள் (முக்கியமாக Comedian , ஹீரோயின் போன்றவர்கள்).

7. இரண்டு சம எடை நிறை உள்ள பொருட்கள் மோதினால் இரண்டுக்கும் சம அளவில் தான் சேதம் ஏற்படும் இது அறிவியல் உண்மை ஆனால் ஹீரோ வில்லனை தன் தலையுடன் மோத செய்தால் வில்லனுக்கு மட்டுமே வலிக்கும் ஹீரோ சிரிப்பார் (சக்திமான்???!!!).

8. தீவிரவாதி காஷ்மிரிலிருந்து மட்டுமல்ல ஏன் அப்கனிஸ்தாணிலிருந்து உலகின் எந்த மூலையிலிருந்து வந்தாலும் ஹீரோவிடம் தமிழில் தான் சவால் விடுவார்கள், ஹீரோவும் அவர்களிடம் தமிழில் தான் பதில் பேசுவார் (நேட்டிவிட்டி(Nativity) வேணுமில்ல ).

9.வில்லன்கள் , தீவிரவாதிகள் எத்தனை தடவை எத்தனை குண்டுகள் சுட்டாலும் ஹீரோ மேல படாது , ஹீரோ ஒரே துப்பாக்கியில் அத்தனைபேரையும் சுட்டு தள்ளுவார் குறியே தவறாது.

10. வில்லனின் ஆட்களின் ஒரே ஆஸ்தான வாகனம் டாட்டா சுமோ (TATA Sumo) , அதுவும் அவர்கள் ரோட்டில் போகும் போது இரண்டு பக்கமும் கத்தி செயின் போன்ற ஆயுதங்களை சுமோ விற்கு வெளியே ஆட்டி கொண்டே போவார்கள் (ஊரே நடுங்கனுமில்ல ) . (நாங்களும் ரவுடி தான், ரவுடி தான் ).

11. படத்தில் அப்பாவும் மகனும் ஃபிரெண்ட்ஸ் மாதிரி என்றால், அதை காட்டுவதற்கு இரண்டு பேரும் பியர் குடிக்கிற மாதிரி சீன் கண்டிப்பாக இருக்கும்.

12. யாராவது ரகசியம் தெரிந்தவர்கள் சாகும் போது சரியாக ரகசியத்தின் முன்பாதியை சொல்லிவிட்டு அதற்கு மேல் நேரம் இல்லாமல் செத்து போவார்கள் , அல்லது ஹீரோ அல்லது ஹீரோயினிடம் சத்தியம் வாங்கும் அளவிற்கு தான் நேரம் இருக்கும் , அவர்கள் சத்தியம் செய்த அடுத்த வினாடியில் செத்து போவார்கள்.

13. வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு மட்டும் அழகான ஹீரோயின்கள் கிடைப்பார்கள், அதுவும் ஹீரோ ரவுடி யாக இருந்தால் ஹீரோயினுக்கு காதல் பொத்துக்கொண்டு வரும்.

14. ஹீரோயின்கள் அழகாக இருந்தால் மட்டும் போதாது , அசடாகவும் நடிக்க தெரிய வேண்டும் முக்கால் வாசி தமிழ் ஹீரோயின்கள் ஸ்க்ரீன்இல்(Screen) அசடுதான்.

15. காதலை எதிர்த்த ஹீரோயினின் அப்பா அடிக்கும் அடியில் ஹீரோயின் நேராக பெட் ரூம் ஓடி சென்று தடாலென்று கட்டிலில் விழுந்து சோக கீதம் பாடுவார்.


(to be continued).

ஆண்களுக்கு : புன்னகை எப்போது கண்ணீராகும் ?

1. உங்கள் முதல் குழந்தையை முதன்முதலாய் தூக்கும் போது.
2. நீங்கள் உயிருக்குயிராய் நினைத்தவர்களை நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும் போது.
3. உங்கள் காதலியின் திருமணத்தில் புகைப்படத்திற்கு புன்னகைக்க சொல்லும் போது.
4. நீங்களும் நுங்கள் காதலியும் பேசி பழகிய இடங்களை உங்கள் மனைவியுடன் பார்க்கும் போது.




---

உருப்படாத உண்மை :



அப்பா : அப்பா சொல்றத கேக்கலன்னா உருப்பட முடியாது.

மகன் : நீங்க சொல்றது சரி தான் அப்பா , தாத்தா சொல்றத கேட்டிருந்தா நீங்க இப்படி ஆகி இருக்க மாட்டிங்க.

அப்பா : ???!!!.


---



நொந்தவனின் அறிவுரை

தனியாக டாட்டா (TATA) காட்டும் பெண்களை விட ,
கூட்டத்தில் பாட்டா (BATA) காட்டும் பெண்களே சிறந்தவர்கள்.


---

Wednesday, December 10, 2008

கனவு

கருப்பு வெள்ளை
விழித்திரையில்,
ர் ராய்
கனவுகள்!


---

வித்தியாசம் :

ரம்(Rum) க்கும் செம்(Sem) க்கும் என்ன வித்யாசம்

ரம் : ராவா அடிப்பாங்க

செம் : ராவெல்லாம் படிப்பாங்க

பவர் கட் ஆனாலும் ராவெல்லாம் மொபைல் வெளிச்சத்தில் படிக்கும் ஸ்டுடென்ட்க்கள்


---

சொ (செ ) ல்லாத காதல் :

ஒரு ஆற்றில் விடப்பட்ட
இரண்டு கண்ணீர் துளிகள் பேசிக்கொண்டன,

முதல் துளி : நான் ஒரு காதலை சொல்ல முடியாதவனின் கண்ணில் இருந்து வந்தேன்

இரண்டாம் துளி : நான் அவன் காதலை எதிர்பார்த்து அவளின் கண்ணிலிருந்து வந்தேன் என்றது.


---

மும்முரம் :

அப்பா : எக்ஸாம்க்கு நேத்து ராத்திரி படிச்சியா ?.

மகன் : அமாம் பா படிச்சேன்.

அப்பா : நேத்து ராத்திரி தான் கரண்ட் ஏ இல்லியே அப்புறம் எப்படி படிச்சே ?

மகன் : படிக்கிற மும்முரத்துல கரண்ட் போனதே தெரியாம படிசிக்கினு இருந்தேன்

அப்பா : ????!!!!.


---

கணக்கு

மகன் : அப்பா 2 + 5 எவ்வளவு?

அப்பா : அட மாங்கா மடையா , இது கூட தெரியலையா , தடி மாடு தண்ட சோறு , போய் கால்குலேடோர் கொண்டு வா.

மகன் : ????!!!!!!.

---

Monday, December 8, 2008

தத்துவம் 1009 & 1010

தத்துவம் 1009:

என்ன தான் பேன் (Fan) வேகமா சுத்தினாலும் அதுக்கு மயக்கம் வராது!!!

தத்துவம் 1010:

எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் லைட் (LIGHT) ல இருந்து புகை வராது!!!

காரணமாம் காரணம்

ஒருவன் : நான் சமையல் செய்து, துணிகளை துவைத்து , வீட்டை பராமரித்து வெறுத்து விட்டேன் அதனால் தான் நான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்.
மற்றொருவன் : என்ன கொடும சார் இது நீங்க சொன்ன அதே காரணத்துக்காக தான் டிவோர்சே (Divorce) பண்ணினேன்
ஒருவன் : ????!!!!

---

நினைவுப்பரிசு

பிரிந்து போகும் நாளில் எல்லோரும் கொடுத்தார்கள் "நினைவுப்பரிசு",
நீ மட்டும் தான் தந்தாய் உன் "நினைவுகளை பரிசாக".

---

அருமை.

வாசிக்க தெரிந்த விரல்களுக்கு தான் தெரியும் "வீணையின்" அருமை,
நேசிக்க தெரிந்த மனங்களுக்கு தான் தெரியும் "அன்பின்" அருமை.


---

Sunday, December 7, 2008

கஞ்சதின் சிகரம்:

ஒரு கஞ்சன் வீடு எரிந்து போனது,

போலீஸ் : வீடு எரியும் போது ஏன் போன் செய்யலே ?

கஞ்சன் : நான் பயர் ஸ்டேஷன்க்கு missed கால் கொடுத்தேன் யாரும் திருப்பி பண்ணலே!

போலீஸ் : ???!!!

---

சும்மா இருக்கும் போது சும்மா இருக்கும் நாயை சும்மா சும்மா வம்புக்கு இழுப்போர் சங்கம்.

என்ன தான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும்,
அதாலே கால் மேல கால் போட்டு உட்கார முடியாது.

by--சும்மா இருக்கும் போது சும்மா இருக்கும் நாயை சும்மா சும்மா வம்புக்கு இழுப்போர் சங்கம்.


---

மெட்ராஸ் ஐ வந்தும் அடங்காதவர் சங்கம்

பல் வலி என்றால் பல்லை பிடுங்கலாம்,
ஆனால் கண் வலி என்றால் கண்ணை பிடுங்க முடியுமா?

by - மெட்ராஸ் ஐ வந்தும் அடங்காதவர் சங்கம்

---

கருணை செய்

பர்ஸை திருடிவிட்ட நண்பனே திரும்ப கொடுத்துவிடு
அவள் புகைப்படத்தையாவது.

மூலம் : சூப்பர் நாவெல் (Super Novel).
கவிஞர் : தெரியவில்லை

***

Friday, December 5, 2008

உணவே மருந்து ???

கணவன் (கோபமாக) : பக்கத்து வீட்டு நாய்க்கு சோறு வெச்சியா?
மனைவி : ஆமாங்க என்ன இப்போ ?
கணவன் : அந்த நாய் தெரு மூலையில் செத்து கிடக்கு.
மனைவி : ???!!!

---

கல்லறை

இந்த உலகம் கல்லறை ஆகும் வரை , அந்த கல்லறை ஒரு உலக அதிசயம்
--தாஜ் மகால்

---

யாருக்கு வாய்க்கும் வரம் ???

எந்த மாலை தெய்வதிற்கு , எந்த பூக்கள் சாவு வீட்டிற்க்கு யோசிக்க அவகாசமில்லை பூக்கடையில்.

(சூப்பர் நாவல் இல் படித்தது , எழுதியவர் பெயர் நினைவில்லை )

---

Thursday, December 4, 2008

நட்பு

என்னோடு நீ இருக்கும் நேரத்தில் கண்களை இமைக்க கூட மாட்டேன் ஏன் என்றால் நான் கண் இமைக்கும் நேரம் என் மொபைல் அ ஆட்டை போட்டுடுவே

---

Tuesday, December 2, 2008

பயம்

பயம் தான் தோல்விகளுக்கு அடிப்படை
அதனால்
------------------------------------------
------------------------------------------
------------------------------------------
------------------------------------------
------------------------------------------

தயவு செய்து கண்ணாடியை எப்போதும் பார்க்காதிர்கள்,
முக்கியமாக சிரிக்கும் போது

---

புத்திசாலிகள்

அப்பா : ஏன்டா மெழுகுவர்த்தி ஏத்துற?.
மகன் : கரண்ட்(Current) இல்லயே அதான்!.
அப்பா : சரி சரி அந்த பேன்(fan) யாவது போடு!
மகன் : என்னப்பா சொல்றே பேன் போட்டா மெழுகுவர்த்தி அணைஞ்சிடும்!

---

திரு. இளையராஜா அவர்களின் "How to Name it"

How to Name it by Mastreo Ilayaraja.

Monday, December 1, 2008

உண்மை நிலை

ஒரு மலரின் மீது ஆசைபட்டேன் , பல மலர்கள் வந்தது என் கல்லறைக்கு.!!!???

---

சாப்புடுரத்த நிறுத்து

மருத்துவர் : மீன், நண்டு, கோழி சாப்புடுரத்த நீங்க நிறுத்துனா தான் உங்க உடம்பு குணமாகும்.
நோயாளி : என்ன கொடுமை சார் இது , மீன் நண்டு கோழி சாப்புடுரத்த நான் எப்படி போய் தடுக்க முடியும்?.
மருத்துவர் : !!!!?????

---

சொல் பேச்சு கேளாமை

பேருந்து நடத்துனர் : யோவ் நான் விசில் அடிச்சும் ஏன் நிறுத்தாம போறே ?.
ஓட்டுனர் : போடா புண்ணாக்கு , நான் பிரேக் அடிச்சும் வண்டி நிக்காம போகுது விசில பத்தி பேச வந்துடே.
நடத்துனர் : !!!!????

எவனோ ஒருவன்

கணவன் : நான் நெனைக்கிறேன் நம்ம பொண்ணு காதல்ல விழுந்துட்டான்னு.
மனைவி : எத வெச்சு சொல்லறீங்க ?
கணவன் : இப்ப எல்லாம் அவ (pocket money) கேக்குறதே இல்ல!!!.

---
நண்பர் அமீர் அனுப்பியது

---------------------
உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்? என்றாய். பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குத்தான்! என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ஒரு நிமிஷம்... நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!? என்றாய்.

காதல் அப்படித்தான்... துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!
-----------------
அதிக நேரம் கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக் கொள்ளப் போகிறது!
--------------------------
நீ வரைந்த கோலம் அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது அழகு என்கிறேன்!

Wednesday, November 26, 2008

நடன மதிப்பெண்

ஆசிரியர் : உன்னை கணக்கு போட சொன்னா ஏன்டா டான்ஸ் (Dance) ஆடுறே?
மாணவன் : நீங்க தானே சார் ஸ்டெப்ஸ் க்கு (steps) மார்க் உண்டுன்னு சொன்னிங்க!!!
ஆசிரியர் : !!!!???

---

சாகும் வரை ???

யாரோ என்னிடம் கேட்டார்கள் உன்னுடனான நட்பு எப்போது முடியும் என ,
நான் அமைதியாகி விட்டேன் ஏன் என்றால் ஏன் இறப்பு எப்போது என்று தெரியாததால்!!!!


---

பிரிவுத்துயர்

இப்போது மழை பெய்கிறது, ஜன்னலை திறந்து வெளியே பார் ,
பெய்யும் மழைத்துளிகளை கணக்கெடு ஏன் என்றால் அதானை தடவை உன்னை நான் மிஸ் (பிரிவுதுயரடைகிறேன்) செய்கிறேன்.

---

புத்திசாலி

முதலாமனவர் : நீங்க குளிக்கும் போது குளிரா இருந்தா என்ன பண்ணுவிங்கோ?.
இரண்டமானவர் : நான் போர்வை போர்த்திக்கொண்டு குளிப்பேன்.
முதலாமனவர் : !!!!?????.
-----

ரயில் பெட்டியில் இருவர்

முதலாமனவர் : கொஞ்சம் இது என்ன ஸ்டேஷன் ன்னு பாத்து சொல்றீங்களா?
இரண்டமானவர் : (ஜன்னலை திறந்து பார்த்து விட்டு ) இது ரயில்வே ஸ்டேஷன் தான்
முதலாமனவர் : !!!!?????

Tuesday, November 25, 2008

சந்தேக ராமன்

அப்பாவுக்கு அறுபதனாயிரம்
மனைவிகள் இருந்தும்
சந்தேகம் இல்லை,
ராமனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்.

-கபிலன்.

Monday, November 24, 2008

வேண்டுதல்

நீதிபதி : சாமி தலையிலிருந்து கிரீடத்த ஏன் திருடினாய்

திருடன் : ஐயா ! சாமிக்கு "மொட்டை" போடுறதா வேண்டிகிட்டேன் அதான்!!

நீதிபதி : !!!!?????

Wednesday, November 19, 2008

வாழ்க்கை எனும் பயணம்

வாழ்க்கை என்றால் 1000 மேடு 999 பள்ளம்,கல்லு, முள்ளு இருக்கும் அதற்காக நீ கவலை படாதே ஒரு நல்ல பாட்டா (Bata) செருப்பு வாங்கி போடு போதும்.

by -- Bata கடையில் வேலை பார்ப்போர் சங்கம்


சாகும் வரை

மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது ஆனால் என் மரணம் பற்றி எனக்கு தெரியும் அது நான் உன்னை மறந்து விட்ட நொடி.

வாழ்வே கனவாக

விடியும் வரை தெரியாது நாம் காண்பது கனவு என்று ,
வாழும் வரை தெரியாது நாம் வாழ்வது யாருக்காக என்று

-

விடுகதை:

ஊரு இருக்கும் ஆனால் வீடு இருக்காது,
கடல் இருக்கும் ஆனால் தண்ணீர் இருக்காது,

அது என்ன?

..........................................................................

..........................................................................

..........................................................................

அது உலக வரைபடம்

உன் பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக்கொள்!!!!

விக்கல்

நான் நினைக்கும் போது எல்லாம் நீ விக்குவாய் என்றால், நீ இந்நேரம் விக்கியே செத்து இருப்பாய்!!!!!!!!

காலை வணக்கம் Good Morning

நீ என்பது ஒரு எழுத்து
நான் என்பது இரண்டு எழுத்து
அன்பு என்பது மூன்று எழுத்து
இன்பம் என்பது நான்கு எழுத்து
.......................................................
.......................................................
.......................................................
.......................................................
உனக்கு 'Good Morning' சொல்வது
என்பது என் தலை எழுத்து

Good Morning

கண் சிமிட்டும் நேரம்.

கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப்பட்டேன் அன்று,
கண் சிமிட்டும் நேரமாவது பார்த்து விட ஆசை படுகிறேன் இன்று.

உலகம் அழியும் நேரம்

முனிவர் : கடவுளே இந்த உலகம் எப்போது அழியும்.
கடவுள் : இந்த sms யாரு படிகிறாங்களோ அவங்க குளிச்சா தான் அழியும்.
முனிவர் : ஐய் ஜாலி அப்போ இந்த ஜென்மத்துல இந்த உலகம் அழியாது.

பூமியின் தவம்!!!

மழையை போல எப்பவாவது நீ என்னை நினைத்து கொள்வாய்,
ஆனால் பூமியை போல எப்போதும் உன் வரவை எதிர்பார்த்து நினைத்து காத்திருப்பேன்.

பிறந்த நாள் பரிசு

கணவன்: உன் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டும்?
மனைவி: வேற ஒன்னும் வேண்டாங்க ஒரு 'ring' போதும்
கணவன்: 'land line la' ya 'Cellula' ya
மனைவி: ???!!!!!!

ஆயுள்

என் ஆயுள் உள்ளவரை உன் அன்பு வேண்டும் ,
அல்லது உன் அன்பு உள்ள வரை என் ஆயுள் போதும்.

Friday, November 14, 2008

யாத்திரைப் பத்து

யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்
(தில்லையில் அருளியது - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607

அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611

பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612

சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614

திருச்சிற்றம்பலம்

மூலம் சைவம்.org

Wednesday, November 12, 2008

சோழன் கரிகாற் பெருவளத்தான்.

இறந்தோன் அவனே!
பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,
பருதி உருவின் பல்படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்;
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்
அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,
பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்துகட்டு அழித்த வேங்கையின்,
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.

போய் வா என் தோழியே

விகடனில் எப்போதோ படித்தது அருமையான ஒரு கவிதை (முழுமையானது அல்ல )
போய் வா என் தோழியே , உன்னை பற்றி எந்த புகாரும்மில்லாததால் வழி அனுப்பி வைக்கிறேன்.

.......................... ..........................
.......................... ..........................

.......................... ..........................
.......................... .......................... மறந்து விடுகிறேன்
.......................... .......................... மறந்து விடுகிறேன்

.......................... .......................... மறந்து விடுகிறேன்

ஆனால் நம் வாழ்க்கைக்காக நான் கொஞ்சிய வார்த்தைகளை
கூடத்தில் அரிசி கொத்தி கொண்டிருக்கும் அந்த கோழிகளுக்கு
போட்டு விட்டு அதை கொத்திதின்னுவதை கண்கலங்க பார்த்து கொண்டிருந்தாயே அதை மட்டும் மறப்பதற்கில்லை


(முழு கவிதையும் இருந்தால் யாரவது கொடுத்து உதவுங்கள் )

Tuesday, November 11, 2008

என் இதயம் இறந்து போனதை

குமுதத்தில் எப்போதோ படித்தது (சுமார் 10 வருடம் இருக்கும்)
(முழுமையானது அல்ல )

.........................
..........................
..........................

என் இதயம் இறந்து போனதை
மறந்தே தான் போனாயோ?

..........................
..........................
..........................

இறந்து போ!
இறந்து போ!
இறந்து போ!


(முழு கவிதையும் இருந்தால் யாரவது கொடுத்து உதவுங்கள் )

Monday, November 3, 2008

சுஜாதா

ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்
- சுஜாதா

கல்யாண்ஜி கவிதை

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.


- கல்யாண்ஜி (கல்யாண்ஜி கவிதைகள்)

நன்றி :http://yosinga.blogspot.com/

http://kalyaanji.blogspot.com/


(கல்யாண்ஜி கவிதைகள் : புதுமைப் பித்தன் பதிப்பகம், 7 முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை 600083- விலை- ரூ 100)

நகுலன் கவிதை

ஒரு கட்டு வெற்றிலை , பாக்கு
சுண்ணாம்பு , புகையிலை
புட்டி பிராந்தி
நண்பா …
இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு

- நகுலன்(கோட் ஸ்டாண்ட் கவிதைகள்)

கவிதைகள் from http://vadakaraivelan.blogspot.com/


நடன ஒத்திகை

37, 38 எனக்
கடந்து கொண்டிருந்தது வயது
முந்தைய நாள்
பள்ளி ஆண்டு விழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள்
தன் மகளைப் போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15 வயதிலிருந்து.
- நரன்
- உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.


வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

- நரன்
- உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.


காத்துக் கிடந்த பக்கங்கள்

உன் மேஜை மேல்
புத்தகமொன்று விரிந்து கிடக்கிறது
காற்றின் கரங்கள்
புதுப் புதுப் பக்கங்களாய் என்னைக்
காட்டிக் கொண்டிருக்கிறது உனக்கு.
முழுதுமாய் நீ
வாசித்து விடுவாயென்ற வேட்கையில்
வேகவேகமாய்ப் புரண்டு படுக்கையில்
முடிவதற்கு முன்பாகவே
சட்டென்று மூடி விடுகிறாய் என்னை.
மீண்டும் உன் மேஜை மேல்
அந்தப் புத்தகம் காத்துக் கிடக்கிறது
மின் விசிறியைப் பார்த்தபடி
மிச்ச அதன் பக்கங்களோடு.

-எஸ்.நடராஜன்
- தீராநதி அக்டோபர் 2008 இதழில்.


அவள் விகடனில் சில சமயம் அத்தி பூத்தாற்போல நல்ல கவி்தை கிடக்கும்.

தூரத்து அப்பா

குல்பி ஐஸ்காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது
பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்..
வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்.

-எம்.சுதா முத்துலட்சுமி
- அவள் விகடன் - 24 அக்டோபர் 2008

நன்றி

http://vadakaraivelan.blogspot.com/


Thursday, October 30, 2008

பட்டினத்தார் 1

"உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று
வெயில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய ஒரு வேட்டி
உண்டு சகம் முழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும்
உண்டு பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு நெஞ்சே
நமக்குக் குறைவில்லையே! "

---பட்டினத்தார்

Monday, October 20, 2008

இது காமெடி டைம் மச்சி:

"என்னிடம் மின்சாரத்துக்கு திட்டம் இருக்கிறது அதை சொன்னால் கலைஞர் திருடிவிடுவார்."
--விஜயகாந்த்
... ஹா ஹா

Friday, October 17, 2008

பெர்னாட் ஷா

ஒரு பொருளினால் இரண்டு வகையான துக்கங்கள் வருகிறது, ஒன்று அந்த பொருள் கிடைக்காததினால் வரும், இன்னொன்று அது கிடைத்த பின் வரும்.---------- பெர்னாட் ஷா

Thursday, October 2, 2008

கடி

இன்றைய கடி (அனுபவப்பட்டது): என்னதான் மௌஸ் அம்பு ஷார்ப் ஆ இருந்தாலும் சமயத்துக்கு பல் குத்த முடியாது!!! :).

Friday, September 26, 2008

http://adaleru.wordpress.com/2008/09/19/dhevathai/

இந்த வலை பூவிலிருந்து எடுக்கப்பட்டது

http://adaleru.wordpress.com/2008/09/19/dhevathai/


தேவதைகளின் கவிஞன் கவிதைகள்


சீப்பெடுத்து

உன் கூந்தலைச் சீவி

அலங்கரித்துக்கொண்டாய்.

அந்தச் சீப்போ

உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து

தன்னை அலங்கரித்துக்கொண்டது.

******************************

எதற்காக

நீ கஷ்டப்பட்டுக் கோலம்

போடுகிறாய்…?

பேசாமல்

வாசலிலேயே

சிறிது நேரம் உட்கார்ந்திரு.

போதும்!

*******************

இது நான் ரசித்த கவிதைகள் மேலும் கவிதைகளுக்கு


http://adaleru.wordpress.com/2008/09/19/dhevathai/

Wednesday, September 17, 2008

மூ. மாறன் கவிதை

திரை சீலையை விலக்கி பார்த்தேன் தெருவில் அம்மணமாய் சிறுவர்கள்

- மூ. மாறன். வேலுர்.