Friday, December 12, 2008

பழமொழிகளும் அதன் நிஜமான அர்த்தங்களும்

வழக்கில் உள்ளது : "சேலை கட்டிய பெண்களை நம்பாதே!"

சரியான பதம் : " சேல் அகற்றிய பெண்களை நம்பாதே!"

"சேல் (அச்சம், மடம், நாணம் ) இவ்வற்றை அகற்றிய பெண்களை நம்பாதே" என்பது தான் சரியான அர்த்தம்.

வழக்கில் உள்ளது : "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!"

சரியான பதம் : "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!"

ஆற்றில் சில சமயம் சுழல் ஏற்படும் போது நடுவில் மண்ணை சிலசமயம் நெல் குதிர் போல குவித்துவிடும் ஆனால் அந்த மண் புதைமணல் போல உள்ளே இழுக்கும் தன்மை உடையது அதனால் அதை நம்பி ஆற்றில் இறங்காதே என்று பொருள்.



வழக்கில் உள்ளது : "ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து"

சரியான பதம் : "ஆயிரம் தடவை போய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து"


---

No comments: