Showing posts with label குறுஞ்செய்தி கவிதைகள். Show all posts
Showing posts with label குறுஞ்செய்தி கவிதைகள். Show all posts

Thursday, July 28, 2011

ஒவ்வொரு நாளும்

"நீ உண்மையாக யாரையாவது காதலித்தால்,
நீ தினம் தினம் இறப்பாய்!"

Friday, March 20, 2009

கொல் மை

என்னை கொல்வதற்கு உன்

பார்வை மட்டும் போதுமே

எதற்காக அதில் விஷம்

தடவுகிறாய்?..

கண்ணுக்கு மைபூசும்


தன் காதலியை பார்த்து காதல் எழுதிய கவிஞன்..

சுதனின்விஜி.


---

Thursday, February 19, 2009

ஈரம்!!

"கொட்டும் மழையில் நனைந்து தான் வருகிறாள்!
ஆனால் துளி கூட ஈரம்மில்லை அவள் மனதில்!!"

---

மண்ணாகி!

நான் உன்னை பார்க்கும் போது நீ மண்ணை பார்க்கிறாய்......
என்னை விட மண் அழகாக இருக்கிறதா சொல் .....
உனக்காக மண்ணோடு மண் ஆகிறேன்.....!!!


---

காகிதத்தில் கப்பல் செய்து

நான் கொடுத்த கடிதத்தை வைத்து....
அவள் கப்பல் விட்டு விளையாடி கொண்டு இருக்கிறாள்!!
தண்ணிரில் அல்ல...,

"என் கண்ணீரில்"


---

வெட்கம்

என் கண்ணீருக்கு தான் எத்தனை வெட்கம்....!!
அவள் விலகி சென்ற பிறகு தான், அது வெளியே எட்டி பார்க்கிறது......!!!


---

கண்ணீராக

உன் சந்தோஷத்தில் கூட உன் கூட இருக்க மாட்டேன்....
ஆனால், உன் கஷ்டத்தில் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.....
கண்ணீராக.......!!!!!


---

Wednesday, February 18, 2009

என் சாவுக்கு

என் இறப்பிற்கு
மௌன அஞ்சலி
செலுத்துகிறாயே,

உனக்கு தெரியுமா?
என் இறப்பிற்கு காரணமே
உன் "மௌனம்" தான் என்பதை?

---

Tuesday, February 3, 2009

துணிச்சல்

நேற்று வரை அவளிடம் பேச பயந்த எனக்கு,

இன்று பேச துணிச்சல் வந்தது "திருமண வாழ்த்துக்கள்" என சொல்வதற்கு

---

Wednesday, January 21, 2009

திரும்பி அழைக்கபட்ட தூதர்கள்:

அவளுக்கு நான் கொடுத்த பூக்கள் வீணாகவில்லை
இதோ மொத்தமாக கொண்டு வருகிறாள்
என் கல்லறைக்கு!.


---

கோப படுதல்

நீங்கள் உங்கள் உயிராய் நினைப்பவர்களிடம்
கோபத்தை காட்டாதிர்கள்!

ஏன் என்றால்?

உங்கள் எதிரி என்ன வார்த்தை சொன்னாலும் வாழ்நாள் முழுக்க வலிக்காது,

ஆனால் உங்கள் உயிரானவர்கள் காக்கும் மௌனம் வாழ்நாள் முழுக்க வலிக்கும்.


---

வெங்காய காதல்

அழ வைப்பது அவள் தான் என தெரிந்தும்
அடம் பிடிக்கிறது என் கண்கள்
அவளை தான் பார்க்க வேண்டுமென!.


---

Tuesday, January 20, 2009

பிரியம்

பிரிந்து இருந்து பிரியம் காட்ட வேண்டாம்,

அருகில் இருந்து சண்டை போடு போதும்.

---

Sunday, January 18, 2009

நீ விரும்பும் இதயம்

நீ விரும்பும் இதயம் உன்னிடம் நிறைய எதிர்பார்க்கும்,
ஆனால் உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர்பார்க்கும்.


---

Friday, January 9, 2009

வெயிலின் அருமை...

நீங்கள் பல தடவை உங்களிடம் நெருக்கமாக
இருப்பவர்களை புரிந்து கொள்ள முடிவதில்லை,
ஏன் என்றால் கண்ணுக்கு மிக அருகில் இருப்பவைகளை
நம்மால் முழுதாய் படிக்க (பார்க்க) முடியாது.


---

Friday, January 2, 2009

மாற்றம்

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே,
ஆனால் உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர் கிடைத்தால்,
அவர்களை தொலைத்து விடாதே.


---

Wednesday, December 17, 2008

தேவதாசின் வரிகள் 1:

அவள் முத்தம் கொடுத்து விட்டு போன இந்த கன்னத்தில்
வேறு யாரும் முத்தமிட கூடாது என்பதற்க்காக தான்
இந்த முள்வேலி, தாடி



---

காதல் ஓவியம்

நீ வரைந்த ஓவியத்தில் பேரழகாய் தெரிந்தது
ஓரத்தில் இருந்த உன் பெயர்

---

வாழ்வாதாரம்

ஒரு நாள் உனக்கும் எனக்கும் விவாதம் வந்தது ,
நீ கேட்டாய் உனக்கு நான் முக்கியமா , உன் வாழ்க்கை முக்கியமா என்று
நான் சொன்னேன் என் வாழ்க்கை தான் முக்கியம் என்று , அதற்கு நீ கோபித்து கொண்டு போய் விட்டாய் ,
என் வாழ்க்கையே நீ தான் என்பதை சொல்ல அவகாசம் தரவில்லை நீ எனக்கு


---

நீ, நான், நமது விதி :

நீ, நான், நமது விதி
மூவரும் வாழ்க்கை ஓட்டபந்தயத்தில்
ஓடி கொண்டிருக்கிறோம் ,
உன்னை வெற்றி பெற வைக்க நானும்,
என்னை வெற்றி பெற வைக்க நீயும்,
விட்டு கொடுத்து ஓடி கொண்டிருக்க,
நம்மை வென்றது விதி.


---