Wednesday, November 13, 2019

Revenge (2017) -- ஆங்கில பட விமர்சனம்

பழி வாங்கும் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும்?

படத்தில் பழி வாங்குவதற்கு ஒரு தகுந்த காரணமும் இருக்க வேண்டும்!,

மேலும் பழி வாங்கப்படுபவர் மீது கொஞ்சம் கூட இரக்கம் வரவே கூடாது, அப்படி தப்பி தவறி இரக்கம் வந்து விட்டால் அந்த இடத்திலேயே படத்தின் இயக்குனர் தோற்று விட்டார் என்று தான் அர்த்தம்,  2017 இல் வந்த Revenge என்னும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் கலந்த இந்த படத்தின் இயக்குனர் Coralie Fargeat அப்படி நடக்காமல் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.


மெதுவாக ஒரு பாலைவனத்தில்  துவங்கும் படத்தில் ஹெலிகாப்டர் ஒன்று ஒரு ஜோடியை (ரிச்சர்ட் - ஜென்) தனியாக இருக்கும் ஒரு வீட்டில் இறக்கி விட்டு போகிறது, முதலில் அந்த  ஜோடியை காதலர்கள் அல்லது தம்பதி என்றே நினைக்க வைத்து இருப்பர் படத்தின் இயக்குனர்,  எல்லாம் முடிந்த பின் ரிச்சர்ட் தன்னுடைய  நிஜ மனைவிக்கு போன் செய்து விசாரிப்பான், திருட்டுதனம்  செய்தாலும் தன் குடும்பத்தின் மேலே அதீத பாசம் கொண்டவனாய் இருக்கிறான், பின்னால் அதுவே அவனுக்கு பெரிய தொல்லை ஆக உருவெடுக்கிறது.

இந்த ஜோடி தனித்திருக்க வில்லன்களாய் வந்து சேருகிறார்கள் ரிச்சர்ட் இன்  இரு நண்பர்கள் ஸ்டான் மற்றும் டிமிட்ரி, ரிச்சர்ட் ஜென் உடனான உறவை யாருக்கும் தெரியாமல் வைத்திருக்க நினைக்க அந்த பக்கம் வேட்டைக்கு போன இந்த இரு நண்பர்கள் வந்து விட, அவர்களில் ஒருவன் (ஸ்டான்) ஜென் ஐ வேறு பார்வை பார்க்க படத்தின் திசை ஓரளவிற்கு புரிய ஆரம்பிக்கிறது 

இரவு நாலு பேருடன் நடக்கும் மது விருந்தில் ஜென் மற்ற இருவருடன் சகஜமாகி நடனமாட ஸ்டோன் அதை வேறு மாதிரி எடுத்து கொள்கிறான், மறு நாள் ரிச்சர்ட் வேறு வேலையாய் வெளியில் சென்று விட ஸ்டோன் ஜென் ஐ உறவுக்கு அழைக்கிறான், ஜென் மறுக்க ஸ்டோன் அவளை வன்புணர்வு செய்து விடுகிறான், டிமிட்ரி இதை பார்த்தும் பார்க்காதது போல நடந்து கொள்கிறான்

இனி ரிச்சர்ட் திரும்பி வந்தால் என்ன நடக்கும்?  ரிச்சர்ட் நண்பர்களை பழி வாங்குவானா? இல்லை மன்னிப்பானா? இல்லை நண்பர்கள் ரிச்சர்ட் ஐ ஏதவாது செய்து விடுவார்களா? இந்த புள்ளியில் கதை தாறு மாறு வேகம் எடுக்கிறது!

Spoiler  Alert  : 

படத்தை பார்க்காதவர்கள் மஞ்சளிட்ட பகுதியை படிக்க வேண்டாம், படித்தால் ஒரு அருமையான திரில்லர் ஐ நிச்சயமாய் மிஸ் செய்வீர்கள்.


ரிச்சர்ட் திரும்பி வந்ததும் விஷயம் தெரிந்து விடுகிறது,  அதை சகஜமாய் எடுத்து கொள்கிறான், ஜென் ஐ சமாதான படுத்த பேசுகிறான், அவளோ இந்த சம்பவத்தின் பாதிப்பில் , கோபத்தில் இருக்க, இவன் இந்த விஷயத்தை எளிதாக எடுத்து கொண்டதை பார்த்து கோபத்தில் நம் விஷயத்தை உன் மனைவியிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்ட கோபப்பட்ட ரிச்சர்ட் ஜென் ஐ அறைந்து கீழே தள்ளி விட படம் சூடு பிடிக்க துவங்குகிறது. அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் ஜென் அங்கிருந்து வெறுங்காலுடன் ஓட ரிச்சர்ட் அவளை துரத்த அவனுடைய நண்பர்கள் இருவரும் பின்னாலே ஓடுகின்றனர்.

ஜென் மூச்சிரைக்க ஓடி சென்று ஒரு மலையின் உச்சியில் சென்று திரும்பி பார்க்கிறாள், பின்னால் ஓடி வந்த ரிச்சர்ட் ஜென் ஐ சமாதானப்படுத்தும் விதமாய் "சரி நாம் இப்போதே கிளம்பி செல்லலாம்" என்று ஹெலிகாப்டர் ஐ திரும்பி வர சொல்லி அவள் எதிரிலேயே போன் செய்வது போல நடிக்கிறான், அவளும் நம்பி திரும்ப வர எத்தனிக்க ரிச்சர்ட் அவளருகில் சென்று திடீரென அவளை மலை உச்சியில் இருந்து தள்ளி விடுகிறான்

ஜென் கிழே உள்ள ஒரு காய்ந்த மரத்தில் உடல் குத்தி ரத்த வெள்ளத்தில் விழுந்து விடுகிறாள், ஏன்  என்று ஸ்டோன் மற்றும் டிமிட்ரி கேட்க ரிச்சர்ட் அதற்கு, இதற்கு மேலும் ஜென் ஐ விட்டு வைத்தால் நாம் எல்லோரும் ஜெயிலுக்கு போக வேண்டியது தான் என காரணமும் சொல்கிறான்,

அதற்கு அப்புறம் ரிச்சர்ட் தன நண்பர்களிடம் நாம் இங்கு யாரையும் கூட்டிவரவில்லை யாருக்கும் ஏதும் ஆக  வில்லை, நாம் இங்கு வந்தது விலங்குகளை வேட்டையாட, வேட்டையாடி முடித்த பின் ஊருக்கு சென்ற பின் அனைவரிடமும் இதை தான் கூற வேண்டும் என்று கட்டளையிடுகிறான்

அவர்கள் சென்ற பின்பு ஜென் மயக்கத்தில் இருந்து எழுகிறாள்,மர கிளையில் தன உடல் குத்தி தொங்கி கொண்டு இருப்பதை பார்க்கிறாள், மிகுந்த சிரமத்துக்கு இடையில் அந்த மரத்தையே கீழிருந்து கொளுத்தி எரிய விட்டு அதில் இருந்து தப்பிக்கிறாள்

உடம்பில் முதுகு பகுதியில் மரம் குத்தி  வயிற்று பக்கம் வந்து நீட்டிக்கொண்ட பிறகும் அவள் தப்பிப்பது பெரும் லாஜிக் ஓட்டையாகவே படுகிறது 

ஜென் எப்படி திரும்பி வரும் மூன்று ஆண்களிடம் இருந்து தப்பித்து அவர்களை பழி வாங்கினாள்  என்பதை ரத்தம் தெறிக்க இந்த படத்தில் காண்பித்து இருப்பார்கள்.

Spoiler Ends

லாஜிக் ஓட்டைகள் என்று சொன்னால் முன்பே சொன்னது போல முதுகில் மரம் குத்தி வயிற்று பகுதிக்கு வந்த பின்பும் நடக்க, ஓட, சண்டை போட முடிவது, அது போல தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்வது,  

அந்த ரத்த போக்கிலும் பாலைவனத்தில் ஏதும் உண்ணாமல் 2 நாட்கள் இருப்பது என சிலது உள்ளன, அனால் உண்மையில் படம் பார்க்கும் போது இவை எல்லாம் கண்ணுக்கு தெரிவதே இல்லை, 

படுக்கையறை காட்சிகள் உள்ளன, சிறியவர்களுடன் பார்ப்பதை தவிர்க்கவும்.

பர  பர  ஆக்சன் மற்றும் திரில்லர் படம் பார்க்க வேண்டும் என்பவர்களை இந்த படம் கண்டிப்பாக திருப்தி செய்யும்