Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, June 29, 2018

இதுவல்லவோ தாம்பத்தியம் !!

கணவன் - மனைவியாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில், அவர்களினிடையே ஒரு ஒளிவு, மறைவு இருந்தது கிடையாது. ஆனாலும், மனைவி, கணவனிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தாள். அதாவது, அவள் பரண் மீது வைத்திருந்த ஒரு அட்டைப் பெட்டியில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்பதைக் கணவன் பார்க்கவும் கூடாது, அதைப் பற்றி ஏதும் கேட்கவும் கூடாது. கணவனும் அதை மதித்து ஒன்றும் கேட்டிலன்.

மரணப் படுக்கையில் மனைவி கிடக்கும்போது, கணவனிடம் சொல்லுகிறாள்: "உங்களிடம் அனைத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன். அந்தப் பரண் மீது நான் வைத்திருக்கும் அட்டைப் பெட்டியை தயவுசெய்து எடுத்து வாருங்கள்".

அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்குமாறு கணவனிடம் சொல்லுகிறாள். கணவன் திறந்து பார்க்கிறான். உள்ளே, அவள் கையால் உல்லன் நூலால் பின்னிய இரண்டு பொம்மைகளும், ஒரு லட்ச ரூபாயும் இருக்கின்றன. அதன் விவரம் என்னவென்று கணவன் கேட்கிறான்.

மனைவி விளக்கினாள்: "நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது, என்னுடைய பாட்டி எனக்கு ஒரு அறிவுரை சொன்னாள். நல்ல மகிழ்வான திருமண வாழ்க்கை வாழ்வதற்கு, நான் எதற்காகவும் உங்களிடம் எந்த ஒரு விவாதத்தையும் தவிர்க்க வேண்டும் என்றாள். அந்தத் தருணங்களில் எனக்குக் கோபம் வந்தால், அதனை அடக்க, உல்லன் நூலையெடுத்து பொம்மை வடிக்கச் சொன்னாள். அதையே நான் கடைப்பிடித்து வந்தேன்".

மகிழ்ந்து போனான் கணவன். 'இரண்டே இரண்டு பொம்மைகள் மட்டுமே! அப்படியானால், அறுபது ஆண்டு மண வாழ்வில், மனைவி இரண்டு முறைகள் மட்டுமே கோபப்படும்படி நான் நடந்திருக்கிறேன்!'

"அது சரி, இந்த ஒரு லட்ச ரூபாயைப் பற்றியும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுவாயா?" கணவன் கேட்டான்.

மனைவி சொன்னாள்: "ஓ, அதுவா? அது, நான் செய்த மற்ற பொம்மைகள் அனைத்தையும் விற்று வந்தப் பணம்😉😄

Thursday, June 20, 2013

இரண்டு நீச்சல் குளங்கள் எதற்கு?

சர்தார்ஜி நகைச்சுவை

சர்தார்ஜி இரண்டு நீச்சல் குளங்களை கட்டினார்,
ஒன்றில் நீரை நிரப்பியும் ,  மற்றொன்றை காலியாகவும் விட்டார்,
ஏன்  என்று கேட்டதற்கு ,
ஒன்று நீச்சல் தெரிந்தவர்களுக்கு, 
மற்றொன்று நீச்சல் தெரியாதவர்களுக்கு என்றார்!



 

Tuesday, September 1, 2009

சிரிப்பு படங்கள்

உதவும கைகள்
பாலா கிருஷ்ணா (படத்தை சொடுக்கி பெரியதாக பார்க்கவும்)


இந்த படத்திற்கு கருத்து கிடையாது

அன்று



இன்று

Friday, May 15, 2009

சங்கம் வைத்த நகைச்சுவை

நம்ம அடிச்சா அதுக்கு பேரு மொட்ட,
அதுவா விழுந்தா அது சொட்ட.

--------------------------------------------------------

தண்ணி மேல கப்பல் போனா ஜாலி,
கப்பலுக்கு உள்ள தண்ணி போனா நீ காலி.

--------------------------------------------------------

உடம்புல எத்தனை செல் இருந்தாலும்,
அதுக்கு ஒரு சிம் கார்டு கூட போட முடியாது.

--------------------------------------------------------


கிரீம் பிஸ்கெட் ல கிரீம் இருக்கும்,
நாய் பிஸ்கெட் ல நாய் இருக்குமா?.

--------------------------------------------------------

ஒருத்தர் அவரோட "Birth Certificate" அ அவரே அப்ளை பண்ணி வாங்கலாம்,
ஆனா அவரோட "Death certificate" அ அவரே அப்ளை பண்ணி வாங்க முடியுமா?.

-- By "Death certificate" வாங்க முடியாமல் புலம்பும் ஆவிகள் சங்கம்.

--------------------------------------------------------


போர் குதிரை போருக்கு போகும்,
ரேஸ் குதிரை ரேஸ் க்கு போகும்,
வரி குதிரை வரி கட்ட போகுமா?.

-by நேர்மையாக வரி கட்டிவிட்டு ரிலாக்ஸ் அ யோசிப்போர் சங்கம்.

--------------------------------------------------------

ஒரு விளையாட்டு விளையாடலாமா?

நீங்க ரெண்டு வார்த்தை சொல்லணும்,
ஆனா அதுல "Minimum" 50 "Letters" ஆவது இருக்கணும்,
--


--



--


என்ன தெரியலையா?


அது "Post Box",

ஓகே ஓகே கூல்.. அழாதீங்க...


---

Thursday, April 2, 2009

சம்பள நாளில் ஆண்கள் மனைவியிடம் படும் பாடு:

சம்பள நாளில் ஆண்கள் மனைவியிடம் படும் பாடு:



எங்க வெச்சிருக்கே ?






















இப்போ சொல்ல போறியா இல்லையா ?



















காச கொடுத்திட்டா , உனக்கு மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் தருவேன்.



















உனக்கெல்லாம் இப்படி அடிச்சா தான் வழிக்கு வருவே!






















(காசை எடுத்து கொண்டு )


Thank You Dear அடுத்த மாசமும் இப்படியே தரனும் ,


போனா போகுது இந்த வெச்சுக்க இச் இச்


Tuesday, March 31, 2009

Sunday, March 29, 2009

11 H வாசகம்:

11 H பேருந்தில் கண்ட வாசகம்:

Learning , Studying என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது,

Sleeping , Playing என்று சொன்னால் உதடுகள் கூட ஓட்டும்.


---

Thursday, March 26, 2009

வைரஸ் பாதித்த மௌஸ்

என் கம்ப்யூட்டர் மௌஸ் அளவுக்கு அதிகமான வைரஸ் தாக்குதலால் இப்படி ஆகி விட்டது.





---

Tuesday, March 17, 2009

கைபேசி தத்துவம் :

Mobile ல SIM அ போடலன்னா "Insert SIM" ன்னு வரும்,

ஆனா

Battery போடலன்னா "Insert Battery" ன்னு வருமா,

BY


அதிகமா charge ஏத்தி யோசிப்போர் சங்கம்.


---

காதலும் கழுதையும்:

கழுதையை பார் யோகம் வரும்,

காதலித்து பார் சோகம் வரும் ,

by


இரண்டையும் பார்த்தவர்கள் சங்கம்.


---

சொல்வதற்கு ஒன்றுமில்லை :

படத்தை சொடுக்கி பெரிதாக பார்க்கவும்.






---

Friday, March 13, 2009

மரியாதை கிடைக்குமிடம்:

ஆசிரியர்: ஏன்டா college பக்கம் 20 நாளா வரல ?

மாணவன் : எங்க அப்பாதான் சார் "ஒரு எடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு " சொன்னார்.


---

Thursday, March 12, 2009

காக்காவும் காதலும்

காதல்ங்றது ஆயா சுட்ட வடை மாதிரி,

காக்கா மாதிரி எவனாவது தூக்கிட்டு போய்டுவான்,

நட்புங்றது அந்தஆயா மாதிரி எவனாலயும்

தூக்க முடியாது,

தூக்கவும் மாட்டான்,



---

Friday, February 27, 2009

பெண்களின் காதல்:

love பண்ணறப்போ பொண்ணுங்க சொல்லற வார்த்தைகளும் அதன் உண்மையான அர்த்தங்களும்.

I love you da --> உனக்கு கண்டிப்பா ஆப்பு தான் டா.

I miss you da --> உன்ன தொலைச்சி கட்ட போறேன் டா.

நீ தாண்டா என் உயிர் --> உன் யிர் என் கையில தான் டா.

நீ தாண்டா என் செல்லம் --> என் வீட்டு நாய் குட்டி மாதிரி உன்ன அலையை வைக்க போறேண்டா.

---

Monday, February 2, 2009

தமிழ் சினிமாவில் அடிக்கடி கேட்கும் வசனங்கள்

சும்மா மேய்ந்து கொன்டிருந்த போது கண்ணில் பட்டது, தமிழ் சினிமாவில் அடிக்கடி கேட்கும் வசனங்கள், மறுமொழிகளையும் படியுங்கள் , பதிவை விட அதிகமாய் வசனங்கள்.


http://inru.wordpress.com/2009/01/30/fld/

நம்முடைய கற்ப்பனையும் கொஞ்சம் சேர்த்து:


1.ஆளாளுக்கு இப்படியே பேசிக்கிட்டு இருந்த எப்படி?.

2.கற்பழிச்சவனே அந்த பொண்ண கட்டிகிடனும்! இது தான் எட்டு பட்டிக்கும் சேர்த்து தீர்ப்பு .

3.வில்லன்: எவன் லே இந்த சிவா?. "அல்லது அந்த படத்தின் ஹீரோ பேர்".

4.ஆயரம் தான் இருந்தாலும் அவரு உன்ன பெத்தவருமா.

5.ஏய் அவன் உன்ன தாண்டி பாக்குறான்.

6.காதலன் காதலியிடம் : உனக்கு நான் முக்கியமா, இல்ல (அது, அவன் , அப்பா, அம்மா , வேலை ) முக்கியமா நீயே முடிவு பண்ணிக்கோ.

7.எனக்கு அப்பா அம்மா தான் முக்கியம் (இத யாரு சொல்லுவாங்க ன்னு சொல்லனுமா ?).

8. என் பொண்ண ரோட்ல போற பிச்சகாரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன் மகனுக்கு கொடுக்க மாட்டேன்.

9. ச்சி உனக்கு காதல பத்தி என்ன தெரியும்?.

10. உனக்கு சாவு என் கைய்யாள தாண்டா.

11. பூவ வெக்குற எடத்துல பொண்ண வெக்கனமுன்னு சொல்லுவாங்க (யாரு?).

12. எங்கள் காதல் புனிதமானது, தெய்வீகமானது,

13. ம்ம் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் (இது பழைய படத்துல தான் , இப்போ கதையே வேற).

தொடரும் :

Wednesday, January 21, 2009

உண்மை விளம்பி

அரிச்சந்திர மகாராஜா,
இறங்கி வந்தார் பூமிக்கு.
வாங்கினார் ஒரு நோக்கியா.
கடையிலிருந்தே போட்டார் போன் சந்திரமதிக்கு;
“ஐ ஆம் இன் எ மீட்டிங்! திரும்பி வர லேட்டாகும்!”



சினிமா விரும்பி.

---

திருக்குறளை எழுதியவர்

மாணவன் 1: நம்ம டீச்சர்க்கு என்ன ஆச்சு?

மாணவன் 2: ஏன் டா?

மாணவன் 1: திருக்குறளை போர்டு ல எழுதிட்டு , திருக்குறளை எழுதினது யார்ன்னு கேக்குறாங்க?

மாணவன் 2: !!!???


---

சச்சினும் அவள் கணவனும்

ஒருத்தி: சச்சின் க்கும் என் கணவனுக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்!

மற்றொருத்தி: என்ன அது?

ஒருத்தி: சச்சின் "சதம் அடிப்பார்" என் கணவர் "சாதம் வடிப்பார்"!

மற்றொருத்தி: !!!???



---

Wednesday, January 7, 2009

தத்துவம் 1014,15,16

A+, B+, O+ ன்னு எவ்வளவோ வகை வகையாய் ரத்தம் குடித்தாலும்
கொசுவால ரத்த தானம் பண்ண முடியாது!.

என்னதான் TV விடிய விடிய ஓடினாலும் , காலையில் பார்த்தல் ஒரு இன்ச் கூட நகர்ந்திருக்காது!.

தூங்கறதுக்கு முன்னாடி தூங்க போறேன் ன்னு சொல்ல முடியும்,
ஆனா தூங்கி எந்திரிக்கறதுக்கு முன்னாடி எந்திரிக்க போறேன் ன்னு சொல்ல முடியுமா?.