Friday, December 24, 2021

பெரு வெடிப்பு - பிக் பேங் (Big Bang) தொடர், பாகம் 1

பெரு வெடிப்பு அல்லது ஆங்கிலத்தில் பிக் பேங் (Big Bang) எப்படி தோன்றியது? 
அதற்கு முன்னால் என்ன இருந்தது?  எதில் இருந்து இது தொடங்கியது? 


இது போன்ற கேள்விகள் அறிவியலாளர்களின் மனதில் எப்போதும் இருந்து கொண்டு இருக்கும் விடை தெரியா தீராக்கேள்விகளுள் ஒன்று.

அடிப்படையில் பெரு வெடிப்பு எனப்படும் இந்நிகழ்வு தோராயமாக 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாக அறிவியல் முறைப்படி கண்டுபிடித்து உள்ளனர். 

சரி பெரு வெடிப்பிற்கு முன்னால் என்ன இருந்தது ?

பெரு வெடிப்புக்கு முன்னால் என்று ஒன்றுமே இல்லை, ஏன் ஏன்றால் இடமும் காலமும்  (Space and Time) இந்நிகழ்விற்கு பின்பே தோன்றின, இதை புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினம், சுஜாதா அவர்களின் ஒரு உதாரணம் சொல்கிறேன், 

ஒரு பல்லி, எரியும் மின்விளக்கை ஒரு நாள் அல்ல தன் வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொண்டு  இருந்தாலும் விளக்கின் உள் செயல் முறை அதற்கு எப்போதும் புரிய போவதில்லை, அது போல தான் நாம் இந்த பெரு வெடிப்பை அறிய முற்படுவது (நன்றி Mr .GK  Youtuber)
 
 
தொடரும்..

சொந்தக்காரர்கள் செய்யும் அரசியல் - 1

பொதுவாக இரண்டு மனிதர்களுக்கு மேல் ஓரிடத்தில் இருந்தாலே அங்கு அரசியல் கண்டிப்பாக இருக்கும், அதிலும் சொந்தங்களில் சிலர் முனைவர் பட்டம் வாங்கும் அளவுக்கு இதில் கரை தேர்ந்து இருப்பர்.

"சொந்தக்காரர்கள் செய்யும் அரசியல்" இது ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் அளவிற்கு பேசு பொருள் உள்ள தலைப்பு, 

பிறந்த குழந்தையை பார்க்க வருபவர்கள் தவறாது செய்யும் காரியம், குழந்தை யார் ஜாடை என்று ஆராய்வது தான், ஆண் குழந்தை எதிர்பர்த்து ஏமார்ந்து  நிற்கும் அத்தையிடம், குழந்தை அவங்க அம்மா ஜாடை அப்படியே உ ரிச்சி  வெச்சி இல்ல என்று ஆரம்பித்து விட்டு போனால் தான்  இரவு தூக்கமே இவர்களுக்கு.

அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என ஒரு குழந்தையிடம் கேட்டு வீட்டில் யாரோ ஒருவரின் காதில் புகை வரவழைப்பதில் இவர்கள் கில்லாடிகள்,

அதிலும் சில குழந்தைகள் இவர்களுக்கே "Tough" கொடுக்கும் விதமாக ரெண்டு பேரையும் பிடிக்கும் என "Counter' கொடுத்தால், இவர்கள் முகம் போகுப் போக்கு இருக்கிறதே.....

ஒருவன் சம்பளம் எவ்வளவு வாங்குகிறான் என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் இவர்களுக்கு, தன் வீட்டு பிள்ளையின் சம்பளதோடு ஒப்பிட்டு பார்ப்பதில் அவ்வளவு இன்பம், ஆனால் சிலர் வேண்டுமென்றே அதிகமாய் சொல்லி இவர்கள் வயிற்ரெரிச்சலை அதிகப்படுத்துவர்.

தான் நல்ல பெயர் வாங்குகதற்காக இவர்கள் செய்யும், சொல்லும் அத்தனையும் "வேற லெவல்", அதுவும் நெருங்கிய சொந்தங்களுள் போட்டு கொடுக்கும் நேர்த்தி, யோசிக்கும் திறமை எல்லாம் வேற எதுக்காவது பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் இந்தியா வல்லரசு ஆகி இருக்கும்,


சிலர் அவனை ஒயின் ஷாப்பில் பார்த்தேன் என்று வீட்டில் பற்ற வைப்பங்க, உங்களுக்கு அங்கே என்ன வேலை என்றாலும் பதில் தயாராக இருக்கும் நான் சும்மா side dish சாப்பிட தான் போனேன் னு கூசாமல் சொல்லுவாங்க, ஏன் அவனும் சும்மா side dish சாப்பிட போய் இருக்க லாம் அல்லவா?



தொடரும்...