Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Friday, August 3, 2018

வாட்சப் தத்துவங்கள் - 1

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....



நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை




பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.




இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!




நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...




நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....




நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....




வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை




அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?




சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.




கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!




வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.




வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...




மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...




எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....




இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...




பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.




தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!




சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
 உனை_சீரழிக்கும் துரோகியை_விட ...
 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் !.....




அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது




உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..




அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...




பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........




நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது......




வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..




புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!




அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....




வாழ்வோடு போராடிச் சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!




அருமையான வாக்கியங்கள்........ எனக்கு வந்தவை.......
உங்களுடன் பகிர்கிறேன்........

Thursday, August 18, 2011

ஒரே வார்த்தை, ஓகோன்னு...


பல் (நாக்கிடம் ): நான் லேசாக ஒரு கடி கடித்தால் போதும் நீ துண்டாகி விடுவாய்
நாக்கு : நான் லேசாக ஏதாவது தவறாக பேசினால் நீ மொத்தமாய் வாயை விட்டு வெளியே பொய் விடுவாய்

Monday, March 9, 2009

மனதை தொடும் கலை

நீ மனதின் அடி ஆழத்தில் இருந்து பேசாத வரை

நீ யாருடைய மனதையும் தொட முடியாது

---

வெற்றி தோல்வி:

நீ வெற்றி பெற்றால் உலகம் உன்னை அறிந்து கொள்ளும்,

நீ தோல்வியுற்றால் உன்னை நீ அறிந்து கொள்வாய்

---

Tuesday, February 3, 2009

பழி வாங்க:

ஒருவரை பழிவாங்க நல்ல
ஆயுதம்
நீங்கள் நன்றாக வாழ்ந்து காட்டுவது தான்.


---

நினைவுகள்:

நினைவுகள் பெரும் குழப்பத்தை கொடுக்கின்றன

நாம் ஒரு காலத்தில் அழுததை நினைத்தால் சிரிப்பை தருகிறது,

நாம் ஒரு காலத்தில் சிரித்ததை நினைத்தால் அழுகை தருகிறது!



---

Tuesday, January 6, 2009

அமைதியும், புன்னகையும்.

அமைதியாய் இருப்பது , புன்னகை பூப்பது
இரண்டும் இரு பெரும் பலங்கள்,

அமைதியாய் இருத்தல்: பெரும்பாலும் பிரச்சனைகளை தவிர்த்து விடும்.
புன்னகை பூத்தல் : எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாளித்துவிடும்.


---

நேசித்தல்

அன்னை தெரசா :
உன்னிடம் பாசம் வைக்கும் இதயத்தை நேசி ;
உன்னை வெறுக்கும் இதயத்தை இன்னும் அதிகமாக நேசி;

---

Friday, January 2, 2009

மாற்றம்

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே,
ஆனால் உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர் கிடைத்தால்,
அவர்களை தொலைத்து விடாதே.


---

Wednesday, December 17, 2008

ஆசை

பற்றி எரிகிற மரத்தில் பறவைகள் வாழ முடியாது ,
அதே போல ஆசை அதிகம் உள்ள மனதில் உண்மை இருக்காது.

--புத்தர்.

---

அழுவதும் , சிரிப்பதும் :

அழும் பொது தனியாக அழு ,
சிரிக்கும் போது கூட்டத்தில் சிரி,

கூட்டத்தில் அழுதால் நடிக்கிறான் என்பார்கள்!
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

--கண்ணதாசன்.

---

Tuesday, December 16, 2008

தத்துவம் 1013

மனசுக்கு பிடிச்சவங்க முன்னாடி அழுவதும் கஷ்டம் ,
பிடிக்கதவங்களுக்கு முன்னாடி சிரிப்பதும் கஷ்டம்.


---

Monday, December 15, 2008

தலைவனாவதற்கு முதற் படி

கேள்வி : நல்ல தலைவன் ஆவதற்கு முதல் படி என்ன?.

சுஜாதா : இது மாதிரி கேள்வி கேட்பதை நிறுத்துவது.


---

Sunday, December 14, 2008

தத்துவம் 1012:

மனதை திறந்து பேசு ,
மனதில் பட்டதையெல்லாம் பேசாதே.


---

ஒரு நண்பனின் புலம்பல் :

நண்பன் மீது கோபம் கொள் அவன் புரிந்து கொள்வான்,
காதலி மீது கோபம் கொள்ளாதே அவள் புரியாமல் கொல்வாள்


---

Friday, December 12, 2008

தத்துவம் 1011:

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.


---

எண்ணி துணிக

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.


---

ஆட்டோ வாசகம்

தெருவில் கண்டவளை நேசிப்பதை விட,
கருவில் சுமந்தவளை நேசி.


---

நேசிப்பில் முதலிடம்

உன் முதல் சிரிப்பையும்,
முதல் அழுகையையும்
முதலில் ரசித்தவள்
உன் அம்மா,
எனவே நேசிப்பவர்கள் பட்டியலில்
தாயை முதலில் வையுங்கள்.


---