வெள்ளை சர்க்கரை உண்பதால் வரும் ஆபத்து / நோய்கள்
இந்த வலை பூ நான் படித்த புத்தகங்கள், ரசித்த பாடல் வரிகள், ரசித்த படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை கொண்டிருக்கும்.
Just Showcasing the sample talents of respective writers
படைப்புகளின் உரிமை அந்தந்த எழுத்தாளர்களுக்கே:
Thursday, January 27, 2022
Friday, December 24, 2021
பெரு வெடிப்பு - பிக் பேங் (Big Bang) தொடர், பாகம் 1
பெரு வெடிப்பு அல்லது ஆங்கிலத்தில் பிக் பேங் (Big Bang) எப்படி தோன்றியது?
அதற்கு முன்னால் என்ன இருந்தது? எதில் இருந்து இது தொடங்கியது?
இது போன்ற கேள்விகள் அறிவியலாளர்களின் மனதில் எப்போதும் இருந்து கொண்டு இருக்கும் விடை தெரியா தீராக்கேள்விகளுள் ஒன்று.
அடிப்படையில் பெரு வெடிப்பு எனப்படும் இந்நிகழ்வு தோராயமாக 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாக அறிவியல் முறைப்படி கண்டுபிடித்து உள்ளனர்.
சரி பெரு வெடிப்பிற்கு முன்னால் என்ன இருந்தது ?
பெரு வெடிப்புக்கு முன்னால் என்று ஒன்றுமே இல்லை, ஏன் ஏன்றால் இடமும் காலமும் (Space and Time) இந்நிகழ்விற்கு பின்பே தோன்றின, இதை புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினம், சுஜாதா அவர்களின் ஒரு உதாரணம் சொல்கிறேன்,
ஒரு பல்லி, எரியும் மின்விளக்கை ஒரு நாள் அல்ல தன் வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொண்டு இருந்தாலும் விளக்கின் உள் செயல் முறை அதற்கு எப்போதும் புரிய போவதில்லை, அது போல தான் நாம் இந்த பெரு வெடிப்பை அறிய முற்படுவது (நன்றி Mr .GK Youtuber)
தொடரும்..
சொந்தக்காரர்கள் செய்யும் அரசியல் - 1
பொதுவாக இரண்டு மனிதர்களுக்கு மேல் ஓரிடத்தில் இருந்தாலே அங்கு அரசியல் கண்டிப்பாக இருக்கும், அதிலும் சொந்தங்களில் சிலர் முனைவர் பட்டம் வாங்கும் அளவுக்கு இதில் கரை தேர்ந்து இருப்பர்.
"சொந்தக்காரர்கள் செய்யும் அரசியல்" இது ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் அளவிற்கு பேசு பொருள் உள்ள தலைப்பு,
பிறந்த குழந்தையை பார்க்க வருபவர்கள் தவறாது செய்யும் காரியம், குழந்தை யார் ஜாடை என்று ஆராய்வது தான், ஆண் குழந்தை எதிர்பர்த்து ஏமார்ந்து நிற்கும் அத்தையிடம், குழந்தை அவங்க அம்மா ஜாடை அப்படியே உ ரிச்சி வெச்சி இல்ல என்று ஆரம்பித்து விட்டு போனால் தான் இரவு தூக்கமே இவர்களுக்கு.
அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என ஒரு குழந்தையிடம் கேட்டு வீட்டில் யாரோ ஒருவரின் காதில் புகை வரவழைப்பதில் இவர்கள் கில்லாடிகள்,
அதிலும் சில குழந்தைகள் இவர்களுக்கே "Tough" கொடுக்கும் விதமாக ரெண்டு பேரையும் பிடிக்கும் என "Counter' கொடுத்தால், இவர்கள் முகம் போகுப் போக்கு இருக்கிறதே.....
ஒருவன் சம்பளம் எவ்வளவு வாங்குகிறான் என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் இவர்களுக்கு, தன் வீட்டு பிள்ளையின் சம்பளதோடு ஒப்பிட்டு பார்ப்பதில் அவ்வளவு இன்பம், ஆனால் சிலர் வேண்டுமென்றே அதிகமாய் சொல்லி இவர்கள் வயிற்ரெரிச்சலை அதிகப்படுத்துவர்.
தான் நல்ல பெயர் வாங்குகதற்காக இவர்கள் செய்யும், சொல்லும் அத்தனையும் "வேற லெவல்", அதுவும் நெருங்கிய சொந்தங்களுள் போட்டு கொடுக்கும் நேர்த்தி, யோசிக்கும் திறமை எல்லாம் வேற எதுக்காவது பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் இந்தியா வல்லரசு ஆகி இருக்கும்,
சிலர் அவனை ஒயின் ஷாப்பில் பார்த்தேன் என்று வீட்டில் பற்ற வைப்பங்க, உங்களுக்கு அங்கே என்ன வேலை என்றாலும் பதில் தயாராக இருக்கும் நான் சும்மா side dish சாப்பிட தான் போனேன் னு கூசாமல் சொல்லுவாங்க, ஏன் அவனும் சும்மா side dish சாப்பிட போய் இருக்க லாம் அல்லவா?
Tuesday, October 20, 2020
BCG
BCG vaccine stimulates immune responses against Covid-19: Study
https://www.thehindubusinessline.com/news/science/bcg-vaccine-stimulates-immune-responses-against-covid-19-study/article32301761.ece
https://www.ndtv.com/tamil/coronavirus-bcg-vaccine-gives-hope-in-coronavirus-fight-what-co-author-of-study-says-2208197
Thursday, April 9, 2020
இந்த 21 நாட்கள்.
இந்த 21 நாட்கள்.
நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை,
காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம்.
சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை.
பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளை கண்களால் பார்க்க முடிகிறது.
அடிதடி வெட்டு குத்து குறைந்து இருக்கிறது.
மதுக்கடை மூடிக் கிடைக்கிறது.
நகைக் கடைகள் பூட்டியே இருக்கிறது.
ஜவுளிக்கடை விளம்பரங்களே செய்வதில்லை.
நிரம்பி வடியும் மாநகரப் பேருந்துகள் இல்லை.
படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை.
தெருவெல்லாம் சுத்தமாய் கிடக்கிறது. சாக்கடைகள் தூர்வாரப் பட்டுக்கொண்டே இருக்கிறது.
அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள்.
அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை. எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம்.
தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை.
காவல் துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
மருத்துவரை தெய்வமாய் பார்க்க முடிந்திருக்கிறது.
செவிலியரை சகோதரியாய் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறோம்.
சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.
சிட்டு்குருவி சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன.
பறவைகள் சப்தம் பலமாய் கேட்க முடிகிறது.
பொழுது சாயும் போது எந்த இரைச்சலும் இல்லை.
நீ எப்படி வருவயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை.
போதை தேடி யாரும் செல்வதே இல்லை. சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை.
தெருவில் எட்சில் துப்ப யோசிக்கிறோம்.
வெளிநாட்டில் இருந்து வந்ததை வெளியில் சொல்ல யோசிக்கிறோம்.
அகந்தை அழிந்து போய் இருக்கிறது. தான் என்ற கர்வம் தளர்ந்து போய் விட்டது.
சிறுவயது நியாபகங்களை அசை போட துவங்கி இருக்கிறோம்.
தொட்டதிற்கு எல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தி இருக்கிறோம்.
சிரிக்க கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
சிந்திக்க பழகி இருக்கிறோம்.
மற்றவர்கள் வழி புரிந்து இருக்கிறது
. மனது நோகாமல் பேச பழகி இருக்கிறோம்.
இது மட்டும் போதாது, அப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள்.
அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள்.
பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுங்கள்.
மனைவியின் மனதிற்கு நெருக்கமாக இருங்கள்.கணவரின் கைகளை பிடித்து நம்பிக்கை கொடுங்கள்.
பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள்.
மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுங்கள்.
யாரையாவது மன்னிக்க நினைத்தால் மன்னித்தும் விடுங்கள்.
ஒருவேளை இந்த 21 நாட்களோடு உலகம் அழிந்து போவதாய் இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்பீர்களோஅப்படி நேசித்து பாருங்கள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை தெரியாது.எதிர் வீட்டுகாரரின் ஏமாற்றம் புலப்படாது. எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என்று மனம் நினைக்கும். வஞ்சம் தோன்றாது. வாழ வேண்டும் என்ற ஆசை நீண்டு இருக்கும் . வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும்.
மீண்டும் தொடங்குங்கள் எங்கு எந்த தவறை செய்தீர்களோ, அதை திருத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளதென்று புலம்பாதிருங்கள், வீடே இல்லாதவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள். நீங்கள் யரென்பதை உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டு இருக்கிறது. உங்களை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை. தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.
வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும் ரி ஸ்டார்ட் ஆப்ஷன் யை கொடுப்பதில்லை.
இப்போ சொல்லுங்க இது வரமா? சாபமா?
நிச்சயமாக வரம் தான் வாழ்ந்து தான் பார்ப்போமே.........
#வாட்சாப் பார்வார்ட்
#WhatsappForward,
Quarantine Thoughts
Interestingly written: This quarantine is probably God's way of accepting a ton of wishes:
1. Kids: I wish we had no school and play all day - Done
2. Women: I want the undivided attention of my husband- Done
3. Husbands: I'm sick of this traffic, I wish I could work from home. Done
4. Working Moms: I wish I could spend some quality time with my kids and read Done
5.Students: I wish I had no exams? - Done
6. Old Parents: I wish our kids could spend more time with us rather than being busy everyday - Done
7. Employee: I'm slogging too much, need a break.- Done
8. Employers: I have no life of my own, I wish could relax Done
9. Mother Earth: I cant breathe, I wish I could get a break from all this pollution and chaos... Done
Yet we all complain- Beware what you wish - You might just get it! 
#WhatsappForward
Wednesday, November 13, 2019
Revenge (2017) -- ஆங்கில பட விமர்சனம்
பழி வாங்கும் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும்?
படத்தில் பழி வாங்குவதற்கு ஒரு தகுந்த காரணமும் இருக்க வேண்டும்!,
மேலும் பழி வாங்கப்படுபவர் மீது கொஞ்சம் கூட இரக்கம் வரவே கூடாது, அப்படி தப்பி தவறி இரக்கம் வந்து விட்டால் அந்த இடத்திலேயே படத்தின் இயக்குனர் தோற்று விட்டார் என்று தான் அர்த்தம், 2017 இல் வந்த Revenge என்னும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் கலந்த இந்த படத்தின் இயக்குனர் Coralie Fargeat அப்படி நடக்காமல் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.
படத்தில் பழி வாங்குவதற்கு ஒரு தகுந்த காரணமும் இருக்க வேண்டும்!,
மேலும் பழி வாங்கப்படுபவர் மீது கொஞ்சம் கூட இரக்கம் வரவே கூடாது, அப்படி தப்பி தவறி இரக்கம் வந்து விட்டால் அந்த இடத்திலேயே படத்தின் இயக்குனர் தோற்று விட்டார் என்று தான் அர்த்தம், 2017 இல் வந்த Revenge என்னும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் கலந்த இந்த படத்தின் இயக்குனர் Coralie Fargeat அப்படி நடக்காமல் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.
மெதுவாக ஒரு பாலைவனத்தில் துவங்கும் படத்தில் ஹெலிகாப்டர் ஒன்று ஒரு ஜோடியை (ரிச்சர்ட் - ஜென்) தனியாக இருக்கும் ஒரு வீட்டில் இறக்கி விட்டு போகிறது, முதலில் அந்த ஜோடியை காதலர்கள் அல்லது தம்பதி என்றே நினைக்க வைத்து இருப்பர் படத்தின் இயக்குனர், எல்லாம் முடிந்த பின் ரிச்சர்ட் தன்னுடைய நிஜ மனைவிக்கு போன் செய்து விசாரிப்பான், திருட்டுதனம் செய்தாலும் தன் குடும்பத்தின் மேலே அதீத பாசம் கொண்டவனாய் இருக்கிறான், பின்னால் அதுவே அவனுக்கு பெரிய தொல்லை ஆக உருவெடுக்கிறது.
இந்த ஜோடி தனித்திருக்க வில்லன்களாய் வந்து சேருகிறார்கள் ரிச்சர்ட் இன் இரு நண்பர்கள் ஸ்டான் மற்றும் டிமிட்ரி, ரிச்சர்ட் ஜென் உடனான உறவை யாருக்கும் தெரியாமல் வைத்திருக்க நினைக்க அந்த பக்கம் வேட்டைக்கு போன இந்த இரு நண்பர்கள் வந்து விட, அவர்களில் ஒருவன் (ஸ்டான்) ஜென் ஐ வேறு பார்வை பார்க்க படத்தின் திசை ஓரளவிற்கு புரிய ஆரம்பிக்கிறது
இரவு நாலு பேருடன் நடக்கும் மது விருந்தில் ஜென் மற்ற இருவருடன் சகஜமாகி நடனமாட ஸ்டோன் அதை வேறு மாதிரி எடுத்து கொள்கிறான், மறு நாள் ரிச்சர்ட் வேறு வேலையாய் வெளியில் சென்று விட ஸ்டோன் ஜென் ஐ உறவுக்கு அழைக்கிறான், ஜென் மறுக்க ஸ்டோன் அவளை வன்புணர்வு செய்து விடுகிறான், டிமிட்ரி இதை பார்த்தும் பார்க்காதது போல நடந்து கொள்கிறான்
இனி ரிச்சர்ட் திரும்பி வந்தால் என்ன நடக்கும்? ரிச்சர்ட் நண்பர்களை பழி வாங்குவானா? இல்லை மன்னிப்பானா? இல்லை நண்பர்கள் ரிச்சர்ட் ஐ ஏதவாது செய்து விடுவார்களா? இந்த புள்ளியில் கதை தாறு மாறு வேகம் எடுக்கிறது!
Spoiler Alert :
படத்தை பார்க்காதவர்கள் மஞ்சளிட்ட பகுதியை படிக்க வேண்டாம், படித்தால் ஒரு அருமையான திரில்லர் ஐ நிச்சயமாய் மிஸ் செய்வீர்கள்.
ரிச்சர்ட் திரும்பி வந்ததும் விஷயம் தெரிந்து விடுகிறது, அதை சகஜமாய் எடுத்து கொள்கிறான், ஜென் ஐ சமாதான படுத்த பேசுகிறான், அவளோ இந்த சம்பவத்தின் பாதிப்பில் , கோபத்தில் இருக்க, இவன் இந்த விஷயத்தை எளிதாக எடுத்து கொண்டதை பார்த்து கோபத்தில் நம் விஷயத்தை உன் மனைவியிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்ட கோபப்பட்ட ரிச்சர்ட் ஜென் ஐ அறைந்து கீழே தள்ளி விட படம் சூடு பிடிக்க துவங்குகிறது. அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் ஜென் அங்கிருந்து வெறுங்காலுடன் ஓட ரிச்சர்ட் அவளை துரத்த அவனுடைய நண்பர்கள் இருவரும் பின்னாலே ஓடுகின்றனர்.
ஜென் மூச்சிரைக்க ஓடி சென்று ஒரு மலையின் உச்சியில் சென்று திரும்பி பார்க்கிறாள், பின்னால் ஓடி வந்த ரிச்சர்ட் ஜென் ஐ சமாதானப்படுத்தும் விதமாய் "சரி நாம் இப்போதே கிளம்பி செல்லலாம்" என்று ஹெலிகாப்டர் ஐ திரும்பி வர சொல்லி அவள் எதிரிலேயே போன் செய்வது போல நடிக்கிறான், அவளும் நம்பி திரும்ப வர எத்தனிக்க ரிச்சர்ட் அவளருகில் சென்று திடீரென அவளை மலை உச்சியில் இருந்து தள்ளி விடுகிறான்
ஜென் கிழே உள்ள ஒரு காய்ந்த மரத்தில் உடல் குத்தி ரத்த வெள்ளத்தில் விழுந்து விடுகிறாள், ஏன் என்று ஸ்டோன் மற்றும் டிமிட்ரி கேட்க ரிச்சர்ட் அதற்கு, இதற்கு மேலும் ஜென் ஐ விட்டு வைத்தால் நாம் எல்லோரும் ஜெயிலுக்கு போக வேண்டியது தான் என காரணமும் சொல்கிறான்,
அதற்கு அப்புறம் ரிச்சர்ட் தன நண்பர்களிடம் நாம் இங்கு யாரையும் கூட்டிவரவில்லை யாருக்கும் ஏதும் ஆக வில்லை, நாம் இங்கு வந்தது விலங்குகளை வேட்டையாட, வேட்டையாடி முடித்த பின் ஊருக்கு சென்ற பின் அனைவரிடமும் இதை தான் கூற வேண்டும் என்று கட்டளையிடுகிறான்
அவர்கள் சென்ற பின்பு ஜென் மயக்கத்தில் இருந்து எழுகிறாள்,மர கிளையில் தன உடல் குத்தி தொங்கி கொண்டு இருப்பதை பார்க்கிறாள், மிகுந்த சிரமத்துக்கு இடையில் அந்த மரத்தையே கீழிருந்து கொளுத்தி எரிய விட்டு அதில் இருந்து தப்பிக்கிறாள்
உடம்பில் முதுகு பகுதியில் மரம் குத்தி வயிற்று பக்கம் வந்து நீட்டிக்கொண்ட பிறகும் அவள் தப்பிப்பது பெரும் லாஜிக் ஓட்டையாகவே படுகிறது
ஜென் எப்படி திரும்பி வரும் மூன்று ஆண்களிடம் இருந்து தப்பித்து அவர்களை பழி வாங்கினாள் என்பதை ரத்தம் தெறிக்க இந்த படத்தில் காண்பித்து இருப்பார்கள்.
Spoiler Ends
லாஜிக் ஓட்டைகள் என்று சொன்னால் முன்பே சொன்னது போல முதுகில் மரம் குத்தி வயிற்று பகுதிக்கு வந்த பின்பும் நடக்க, ஓட, சண்டை போட முடிவது, அது போல தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்வது,
அந்த ரத்த போக்கிலும் பாலைவனத்தில் ஏதும் உண்ணாமல் 2 நாட்கள் இருப்பது என சிலது உள்ளன, அனால் உண்மையில் படம் பார்க்கும் போது இவை எல்லாம் கண்ணுக்கு தெரிவதே இல்லை,
படுக்கையறை காட்சிகள் உள்ளன, சிறியவர்களுடன் பார்ப்பதை தவிர்க்கவும்.
பர பர ஆக்சன் மற்றும் திரில்லர் படம் பார்க்க வேண்டும் என்பவர்களை இந்த படம் கண்டிப்பாக திருப்தி செய்யும்
Thursday, August 29, 2019
Monday, January 28, 2019
வெற்றிக்கான வழிமுறை!
ஒரு தொழிலாளி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன்தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது.
அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய
யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண் வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது. ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே
தொழிலாளி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது.
ஒவ்வொரு முறையும்
மண்ணை கொட்டும்போது,
கழுதை தனது உடலை ஒரு
முறை உதறிவிட்டு,
மண்ணை கீழே தள்ளி, அந்த
மண்ணின் மீதே நின்று வந்தது. இப்படியே பல
அடிகள் அது மேலே
வந்திருந்தது. இவர்கள்
மேலும் மேலும் மண்ணை
போட போட கழுதை தனது
முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை
கீழே தள்ளி தள்ளி அதன் மீது
ஏறி நின்று வந்தது. கழுதையின் இடைவிடாத
இந்த முயற்சியால்
அனைவரும் வியக்கும்
வண்ணம் ஒரு வழியாக
கிணற்றின் விளிம்பிற்கே
வந்துவிட்டது. விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில்
கனைத்த கழுதை ஒரே
ஓட்டமாக ஓடி
தோட்டத்திற்குள் சென்று
மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில்
இப்படித் தான் நம்மை
படுகுழியில் தள்ளி
குப்பைகளையும்
மண்ணையும் நம் மீது
கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும்.
ஆனால் நாம் தான்
இந்த கழுதை போல
தன்னம்பிக்கையும்
விடாமுயற்சியும்
கொண்டு, அவற்றை உதறித்
தள்ளி மேலே வரவேண்டும்.
நம்மை நோக்கி வீசப்படும்
ஒவ்வொரு கல்லையும்
சாமர்த்தியமாக பிடித்து
படிக்கற்க்களாக்கிக்
கொள்ளவேண்டும். எத்தனை பெரிய குழியில்
நீங்கள் விழுந்தாலும்
“இத்தோடு நம் கதை
முடிந்தது” என்று
கருதாமல் விடாமுயற்சி
என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.
“நீங்கள் எதுக்குள்ளே
விழுந்தா என்ன, உங்க மேல
எது விழுந்தா என்ன?
எல்லாத்தையும் உதறிட்டு,
முன்னேறிச் செல்லுங்கள்”
இதுவே வெற்றிக்கான வழிமுறை!
--வாட்சப்பில் வந்தது, எழுதியவர் யாரென்று தெரியவில்லை
Friday, August 3, 2018
வாட்சப் தத்துவங்கள் - 1
ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....
நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை
பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.
இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...
நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....
நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....
வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை
அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?
சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.
கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.
வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...
மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...
எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....
இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!
சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
உனை_சீரழிக்கும் துரோகியை_விட ...
முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் !.....
அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது
உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..
அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........
நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது......
வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..
புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!
அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....
வாழ்வோடு போராடிச் சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!
அருமையான வாக்கியங்கள்........ எனக்கு வந்தவை.......
உங்களுடன் பகிர்கிறேன்........
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....
நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை
பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.
இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...
நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....
நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....
வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை
அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?
சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.
கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.
வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...
மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...
எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....
இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!
சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
உனை_சீரழிக்கும் துரோகியை_விட ...
முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் !.....
அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது
உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..
அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........
நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது......
வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..
புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!
அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....
வாழ்வோடு போராடிச் சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!
அருமையான வாக்கியங்கள்........ எனக்கு வந்தவை.......
உங்களுடன் பகிர்கிறேன்........
Friday, July 13, 2018
Get Out -- ஆங்கில பட விமர்சனம்
இந்த ஹாலிவுட் காரர்களுக்கும் எப்பவும் ரொம்ப வித்தியாசமாய் சிந்தித்து தான் பழக்கம், இந்த படம் பார்த்து கொண்டு இருக்கும் போது அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியது,
சே என்னம்மா யோசிக்கிறாங்க என என்னும் போது, நம்மூரிலும் இதே கான்செப்ட் இல் ஒரு படம் வந்தது ஞாபகம் வந்தது (அந்த விவரம் Spoiler Alert இல்)
படத்தை பார்க்க ஆரம்பித்த உடன் இது என்ன பேய் படமோ என்ற எண்ணமே வந்தது, நேரம் செல்ல செல்ல இது பேய் படமே தான் என்ற முடிவுக்கு வந்தேன், ஆனால் ரொம்ப technical details லாம் இல்லாமல் என்ன செய்கிறார்கள் எதற்க்காக செய்கிறார்கள் என்று எளிதாய் புரிய வைத்து பார்வையாளனை கடைசி வரை கட்டி போட்டு விட்டார் இயக்குனர்
கதை:
ரோஸ் தன்னுடைய பாய் பிரென்ட் கிறிஸ் ஐ பெற்றோரிடம் திருமணம் செய்வதற்காக அறிமுகப்படுத்த கூட்டி செல்கிறார் போகும் வழியில், போன பின்பு ரோஸின் காட்டு பங்களாவில் நடக்கும் அசம்பாவிதங்கள் கடும் திகிலை கிளப்புகின்றன, அந்த காட்டு பங்களாவில் கிறிஸ் கண்டு கொண்டது என்ன, அவனுக்கு நேர்ந்தது என்ன என்பது தான் மீதி கதை
Spoiler Alert:
படம் பார்க்காதவர்கள் இந்த மஞ்சளிட்ட பகுதியை படிக்க வேண்டாம், இல்லை என்றால் ஒரு அருமையான thriller ஐ miss செய்வீர்கள்
மனிதனுக்கு ஆதியில் இருந்தே இறப்பின் மீது ஒரு அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது, இறப்பை தள்ளி போட, முடிந்தால் இறப்பே வராமல் இருக்க என்ன என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் மனித இனம் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது,
நீங்கள் என்பது என்ன? கேட்டால் நெஞ்சில் கை வைத்து சொல்வீர்கள், அனால் உண்மையில் நீங்கள் என்பது இதயம் அல்ல, கை, கால், முகம் கூட நீங்கள் அல்ல, நீங்கள் என்பது உங்கள் எண்ணங்கள் அதாவது மூளை மட்டுமே, எனவே உங்கள் மூளையை பிறருக்கு வைத்தால் (முடிந்தால்) அவர் உடலில் நீங்கள் தான் இருக்கீறீர்கள் என்று அர்த்தம்.
இனி கதை:
கிறிஸ் உம் ரோஸ் உம் ரோஸ் இன் காட்டு பங்களாவுக்கு வரும் வழியில் ஒரு மான் மீது கார் அடித்து விடுகிறது, ரோஸ் தான் கார் ஒட்டி வந்தாள் என்றாலும் போலீஸ் ஆபிசர் கிறிஸ் இன் தகவல்களை கேட்கிறார், அதற்கு ரோஸ் ஓவர் ரியாக்ட் செய்து தகவல் கொடுக்க விடாமல் செய்கிறாள்,
வீட்டுக்கு வந்த பின்பு கிரிஸ்க்கு வினோத சம்பவங்கள் நடக்கிறது, வீட்டு தோட்டக்காரன் கிறிஸ் ஐ மதிக்காமல் பேசுகிறான், வீட்டு வேலைக்காரி சமயங்களில் வினோதமாக நடந்து கொள்கிறாள்,
கிறிஸ் இந்த காதலி ரோஸ் கிறிஸ் ஐ கூட்டி வருவதற்கு காரணம், ஒரு பெரும் பணக்கார கண் இழந்த சித்திர காரனின் மூளையை கிறிஸ் க்கு வைத்து, சித்திரக்காரனுக்கு இளமையான, கண்பார்வையுடன் உடலை தருவதே,
ஒரு சமயத்தில் அந்த வீட்டிற்கு தான் அழைக்க பட்டு வந்ததற்கு காரணம் தன் உடலை அபகரிக்கவே என்று தெரிய வருகிறது, அதற்க்கு தன காதலி தான் திட்டமே போட்டாள் என்று தெரிய வருகிறது, அதன் பின்பு அவர்களிடம் இருந்து கிறிஸ் தப்பித்தானா இல்லையா, அந்த தோட்டக்காரனும், வேலைக்காரியும் யார் (அது கடைசி 5 ஆவது நிமிடத்தில் தான் தெரிய வரும்) போன்ற விஷயங்கள் சுவாரசியமாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஆனால் சில சந்தேகங்கள்,
1) மூளையையே மாற்றும் அறுவை சிகிச்சை நடக்கும் போது ஒரே ஒரு உதவியாளரை யா வைத்து கொள்வார்கள்?
2) காபி கோப்பையை தட்டி விடும் போது அது அதே சத்தமுடன் தானே விழுகிறது, அப்போது கிறிஸ் க்கு ஒன்றும் ஆக வில்லையே ஏன் ?
இது போன்ற லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும் மொத்தத்தில் இது ஒரு நல்ல படம்,
நம் ஊரில் மாயவன் என்று ஒரு படம் வந்தது, இதே கான்செப்ட் இன்னும் technical ஆக மிரட்டி இருப்பார்கள்
லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும் மொத்தத்தில் இது ஒரு நல்ல படம், திரில்லர் பட ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர்கள் (Rotten Tomato இல் 99% பேர் விருப்பமாய் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் )
Director's Cut கிடைத்தால் பார்க்கவும் இரண்டு மூன்று முடிவுகள் உள்ளன, வெளியிட்ட முடிவே எனக்கு பிடித்து இருந்தது, இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கேள்வி
மொத்தத்தில் நிச்சயமாய் ஒரு முறை பார்க்கலாம், குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் (படுக்கை அறை காட்சிகள் சில உள்ளன).
வித்தியாசமான படம் பார்க்க வேண்டும் என்பவர்களை இந்த படம் நிச்சயமாக ஏமாற்றாது.
சே என்னம்மா யோசிக்கிறாங்க என என்னும் போது, நம்மூரிலும் இதே கான்செப்ட் இல் ஒரு படம் வந்தது ஞாபகம் வந்தது (அந்த விவரம் Spoiler Alert இல்)
படத்தை பார்க்க ஆரம்பித்த உடன் இது என்ன பேய் படமோ என்ற எண்ணமே வந்தது, நேரம் செல்ல செல்ல இது பேய் படமே தான் என்ற முடிவுக்கு வந்தேன், ஆனால் ரொம்ப technical details லாம் இல்லாமல் என்ன செய்கிறார்கள் எதற்க்காக செய்கிறார்கள் என்று எளிதாய் புரிய வைத்து பார்வையாளனை கடைசி வரை கட்டி போட்டு விட்டார் இயக்குனர்
கதை:
ரோஸ் தன்னுடைய பாய் பிரென்ட் கிறிஸ் ஐ பெற்றோரிடம் திருமணம் செய்வதற்காக அறிமுகப்படுத்த கூட்டி செல்கிறார் போகும் வழியில், போன பின்பு ரோஸின் காட்டு பங்களாவில் நடக்கும் அசம்பாவிதங்கள் கடும் திகிலை கிளப்புகின்றன, அந்த காட்டு பங்களாவில் கிறிஸ் கண்டு கொண்டது என்ன, அவனுக்கு நேர்ந்தது என்ன என்பது தான் மீதி கதை
Spoiler Alert:
படம் பார்க்காதவர்கள் இந்த மஞ்சளிட்ட பகுதியை படிக்க வேண்டாம், இல்லை என்றால் ஒரு அருமையான thriller ஐ miss செய்வீர்கள்
மனிதனுக்கு ஆதியில் இருந்தே இறப்பின் மீது ஒரு அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது, இறப்பை தள்ளி போட, முடிந்தால் இறப்பே வராமல் இருக்க என்ன என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் மனித இனம் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது,
நீங்கள் என்பது என்ன? கேட்டால் நெஞ்சில் கை வைத்து சொல்வீர்கள், அனால் உண்மையில் நீங்கள் என்பது இதயம் அல்ல, கை, கால், முகம் கூட நீங்கள் அல்ல, நீங்கள் என்பது உங்கள் எண்ணங்கள் அதாவது மூளை மட்டுமே, எனவே உங்கள் மூளையை பிறருக்கு வைத்தால் (முடிந்தால்) அவர் உடலில் நீங்கள் தான் இருக்கீறீர்கள் என்று அர்த்தம்.
இனி கதை:
கிறிஸ் உம் ரோஸ் உம் ரோஸ் இன் காட்டு பங்களாவுக்கு வரும் வழியில் ஒரு மான் மீது கார் அடித்து விடுகிறது, ரோஸ் தான் கார் ஒட்டி வந்தாள் என்றாலும் போலீஸ் ஆபிசர் கிறிஸ் இன் தகவல்களை கேட்கிறார், அதற்கு ரோஸ் ஓவர் ரியாக்ட் செய்து தகவல் கொடுக்க விடாமல் செய்கிறாள்,
வீட்டுக்கு வந்த பின்பு கிரிஸ்க்கு வினோத சம்பவங்கள் நடக்கிறது, வீட்டு தோட்டக்காரன் கிறிஸ் ஐ மதிக்காமல் பேசுகிறான், வீட்டு வேலைக்காரி சமயங்களில் வினோதமாக நடந்து கொள்கிறாள்,
கிறிஸ் இந்த காதலி ரோஸ் கிறிஸ் ஐ கூட்டி வருவதற்கு காரணம், ஒரு பெரும் பணக்கார கண் இழந்த சித்திர காரனின் மூளையை கிறிஸ் க்கு வைத்து, சித்திரக்காரனுக்கு இளமையான, கண்பார்வையுடன் உடலை தருவதே,
ஒரு சமயத்தில் அந்த வீட்டிற்கு தான் அழைக்க பட்டு வந்ததற்கு காரணம் தன் உடலை அபகரிக்கவே என்று தெரிய வருகிறது, அதற்க்கு தன காதலி தான் திட்டமே போட்டாள் என்று தெரிய வருகிறது, அதன் பின்பு அவர்களிடம் இருந்து கிறிஸ் தப்பித்தானா இல்லையா, அந்த தோட்டக்காரனும், வேலைக்காரியும் யார் (அது கடைசி 5 ஆவது நிமிடத்தில் தான் தெரிய வரும்) போன்ற விஷயங்கள் சுவாரசியமாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஆனால் சில சந்தேகங்கள்,
1) மூளையையே மாற்றும் அறுவை சிகிச்சை நடக்கும் போது ஒரே ஒரு உதவியாளரை யா வைத்து கொள்வார்கள்?
2) காபி கோப்பையை தட்டி விடும் போது அது அதே சத்தமுடன் தானே விழுகிறது, அப்போது கிறிஸ் க்கு ஒன்றும் ஆக வில்லையே ஏன் ?
இது போன்ற லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும் மொத்தத்தில் இது ஒரு நல்ல படம்,
நம் ஊரில் மாயவன் என்று ஒரு படம் வந்தது, இதே கான்செப்ட் இன்னும் technical ஆக மிரட்டி இருப்பார்கள்
லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும் மொத்தத்தில் இது ஒரு நல்ல படம், திரில்லர் பட ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர்கள் (Rotten Tomato இல் 99% பேர் விருப்பமாய் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் )
Director's Cut கிடைத்தால் பார்க்கவும் இரண்டு மூன்று முடிவுகள் உள்ளன, வெளியிட்ட முடிவே எனக்கு பிடித்து இருந்தது, இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கேள்வி
மொத்தத்தில் நிச்சயமாய் ஒரு முறை பார்க்கலாம், குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் (படுக்கை அறை காட்சிகள் சில உள்ளன).
வித்தியாசமான படம் பார்க்க வேண்டும் என்பவர்களை இந்த படம் நிச்சயமாக ஏமாற்றாது.
Friday, June 29, 2018
கேட்ட கேள்வி..!
23 முறை கேட்ட கேள்வி..!
ஒரு வசதியான வீட்டின் வரவேற்பறைக்கு முன்பு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஜன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருடன் அவரது மனைவியும் அமர்ந்து கொண்டிருந்தார். அவர்களுக்கு 45 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரும் அவர்கள் கூடவே அமர்ந்து லேப்-டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அந்த சமயம் திடீரென ஒரு காகம் முதியவரின் அருகில் இருந்த ஜன்னலில் வந்து அமர்ந்தது.
அப்போது அந்த முதியவர் தன் மகனிடம்! என்ன இது?.. என்று கேட்டார்.
அங்கு லேப்-டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மகன் அது ஒரு காகம்! என்று கூறினார். சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும்! என்ன இது? என்று கேட்டார்.
அதற்கு மகன் இப்பத்தானே சொன்னேன் அது ஒரு காகம் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மூன்றாவது முறையாக அந்த முதியவர் தன் மகனிடம்! என்ன இது? என்று கேட்டார். சற்று எரிச்சலான குரலில் மகன்! அது ஒரு காகம் காகம்! என்று பதிலளித்தார்.
இன்னும் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவனது தந்தை நான்காவது முறையாக என்ன இது? என்று கேட்டார்.
அதனைக் கேட்ட மகன் பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கோபமாக அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வேன் அது ஒரு காகம்! என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா? என்று கத்தினார்.
முதுமை அடைந்த தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து திருமுறையை ஓதிக்கொண்டிருந்த முதியவரின் மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்றார். அங்கிருந்து அவர் கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்றை எடுத்துக் கொண்டுவந்தார்.
அது அந்த முதியவரின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அந்த நாட்குறிப்பை எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்த தாய் அதை தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அந்தப் பக்கத்தில் எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது ஜன்னலில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. அப்போது என் மகன் 'அது என்ன" என்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்" என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறையும் அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக கள்ளங்கபடமற்ற என் குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது! என்று எழுதி இருந்தது.
இதைப் படித்த மகனின் கண்கள் கலங்கின. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவர் மனம் வருந்தினார்.
தத்துவம் :
பெற்றோர்களின் மனதை புண்படுத்தாமல் புரிந்துக்கொண்டு வாழ்ந்தால் அவர்கள் வாழும் இறுதி காலத்தில் இன்பமாக வாழ்வார்கள்.
இதுவல்லவோ தாம்பத்தியம் !!
கணவன் - மனைவியாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில், அவர்களினிடையே ஒரு ஒளிவு, மறைவு இருந்தது கிடையாது. ஆனாலும், மனைவி, கணவனிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தாள். அதாவது, அவள் பரண் மீது வைத்திருந்த ஒரு அட்டைப் பெட்டியில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்பதைக் கணவன் பார்க்கவும் கூடாது, அதைப் பற்றி ஏதும் கேட்கவும் கூடாது. கணவனும் அதை மதித்து ஒன்றும் கேட்டிலன்.
மரணப் படுக்கையில் மனைவி கிடக்கும்போது, கணவனிடம் சொல்லுகிறாள்: "உங்களிடம் அனைத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன். அந்தப் பரண் மீது நான் வைத்திருக்கும் அட்டைப் பெட்டியை தயவுசெய்து எடுத்து வாருங்கள்".
அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்குமாறு கணவனிடம் சொல்லுகிறாள். கணவன் திறந்து பார்க்கிறான். உள்ளே, அவள் கையால் உல்லன் நூலால் பின்னிய இரண்டு பொம்மைகளும், ஒரு லட்ச ரூபாயும் இருக்கின்றன. அதன் விவரம் என்னவென்று கணவன் கேட்கிறான்.
மனைவி விளக்கினாள்: "நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது, என்னுடைய பாட்டி எனக்கு ஒரு அறிவுரை சொன்னாள். நல்ல மகிழ்வான திருமண வாழ்க்கை வாழ்வதற்கு, நான் எதற்காகவும் உங்களிடம் எந்த ஒரு விவாதத்தையும் தவிர்க்க வேண்டும் என்றாள். அந்தத் தருணங்களில் எனக்குக் கோபம் வந்தால், அதனை அடக்க, உல்லன் நூலையெடுத்து பொம்மை வடிக்கச் சொன்னாள். அதையே நான் கடைப்பிடித்து வந்தேன்".
மகிழ்ந்து போனான் கணவன். 'இரண்டே இரண்டு பொம்மைகள் மட்டுமே! அப்படியானால், அறுபது ஆண்டு மண வாழ்வில், மனைவி இரண்டு முறைகள் மட்டுமே கோபப்படும்படி நான் நடந்திருக்கிறேன்!'
"அது சரி, இந்த ஒரு லட்ச ரூபாயைப் பற்றியும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுவாயா?" கணவன் கேட்டான்.
மனைவி சொன்னாள்: "ஓ, அதுவா? அது, நான் செய்த மற்ற பொம்மைகள் அனைத்தையும் விற்று வந்தப் பணம்

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...
சம்பவம்-1 👇👇👇👇👇👇
24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.
சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.
சம்பவம்-2 👇👇👇👇👇👇👇👇
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.
சம்பவம்-3 👇👇👇👇👇👇
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."
ஒரு கட்டு கீரை என்ன விலை....?""
"ஐந்து ரூபாய்"
ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான் தருவேன்.
மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா"
அதெல்லாம் முடியாது.
மூன்று ரூபாய் தான்
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"
முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"
இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..
"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?
என்று கேட்கஅதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.
இது தான் உண்மையில் மனித நேயம் ......
சம்பவம் 4 👇👇👇👇👇👇👇
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...
திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.
மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...
ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.
இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.
அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.
" Be Positive Always"படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...
Thursday, June 28, 2018
சிந்தித்து செயல்பட்டால்? : வாட்சப் முன்னோடி செய்தி கதை
எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.
அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.
ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.
நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.
அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.
மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.
பிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார் அவரை பார்க்க வந்த அவரது நண்பர் ஒரு சதுரங்க போர்டும் காயின்களும் கொடுத்துவிட்டு போனார் தனிமையில் சதுரங்கத்தில் விளையாடியே நாட்களை கழித்து இறந்தும் போனார் சிறிது காலத்திற்கு முன் அவர் விளையாண்ட சதுரங்க அட்டையை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது அதை வாங்கிய நபர் அதை பிரித்து பார்த்த போது ஹெலீனா தீவிலிருந்து தப்பிப்பதற்கான வரைபடம் இருந்தது எப்பேற்பட்ட திறமையான மாவீரன் ஆனால் இனிமேல் தப்பிக்க முடியாது என்ற எண்ணமே நெப்போலியனை அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடுத்து விட்டது...
சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி 


Wednesday, June 27, 2018
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்கள்:
கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -
பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?
பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே.
பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? –
பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.
கேள்வி: தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? –
பதில்: கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.
கேள்வி: லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?
பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?
பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.
கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்!
பதில்: உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!
கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ?
பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.
கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா?
பதில்: சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?
கேள்வி: ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்?
பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.
கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது?
பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.
கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?
பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.
கேள்வி: இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது?
பதில்: ‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’
கேள்வி: அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்?
பதில்: ‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்
Tuesday, June 26, 2018
வாட்ஸாப் முன்னோடி செய்தி (Forward Message) - 1
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,
" தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!!
"அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!
"அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!!
"சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!
"அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது.
"அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!
இருந்தும் கோபம் தாளாமல்.....,
"லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.
"எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!
"அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,
"மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!!
அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.
உடனே...,
" வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,
" பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!!
மற்ற நாய்களும் குமயங்கியது
" இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,
" வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது"....!!
"இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது".......!!
"இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால்"........,
அதற்கு புரிந்திருக்கும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° °°°°°°°°°°°°°°°°°
1. தான் நுழைந்தது....,
" நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று "......,
2. தன்னை சுற்றி இருந்தது........,
" தனது பிம்பங்கள் தான் என்று"....,
3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல......,
"தன் குரலின் எதிரொலி தான் என்று"......,
நீதி:
```````
"இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது".....!!
நாம் கோபப்பட்டால்....,
" பதிலுக்கு கோபம் கிடைக்கும்".....!!
அன்பு செலுத்தினால்.....,
" அன்பு கிடைக்கும்"......!!
"நீ எதை விதைக்கிறாயோ"....,
"அதுவே முளைக்கும்"...!!
மனதை தொட்ட பதிவு
மறுபதிப்பு
வாட்ஸாப் இல் வந்தது, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Subscribe to:
Posts (Atom)
