Friday, December 24, 2021

பெரு வெடிப்பு - பிக் பேங் (Big Bang) தொடர், பாகம் 1

பெரு வெடிப்பு அல்லது ஆங்கிலத்தில் பிக் பேங் (Big Bang) எப்படி தோன்றியது? 
அதற்கு முன்னால் என்ன இருந்தது?  எதில் இருந்து இது தொடங்கியது? 


இது போன்ற கேள்விகள் அறிவியலாளர்களின் மனதில் எப்போதும் இருந்து கொண்டு இருக்கும் விடை தெரியா தீராக்கேள்விகளுள் ஒன்று.

அடிப்படையில் பெரு வெடிப்பு எனப்படும் இந்நிகழ்வு தோராயமாக 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாக அறிவியல் முறைப்படி கண்டுபிடித்து உள்ளனர். 

சரி பெரு வெடிப்பிற்கு முன்னால் என்ன இருந்தது ?

பெரு வெடிப்புக்கு முன்னால் என்று ஒன்றுமே இல்லை, ஏன் ஏன்றால் இடமும் காலமும்  (Space and Time) இந்நிகழ்விற்கு பின்பே தோன்றின, இதை புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினம், சுஜாதா அவர்களின் ஒரு உதாரணம் சொல்கிறேன், 

ஒரு பல்லி, எரியும் மின்விளக்கை ஒரு நாள் அல்ல தன் வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொண்டு  இருந்தாலும் விளக்கின் உள் செயல் முறை அதற்கு எப்போதும் புரிய போவதில்லை, அது போல தான் நாம் இந்த பெரு வெடிப்பை அறிய முற்படுவது (நன்றி Mr .GK  Youtuber)
 
 
தொடரும்..

No comments: