Friday, July 13, 2018

Get Out -- ஆங்கில பட விமர்சனம்

இந்த ஹாலிவுட் காரர்களுக்கும் எப்பவும் ரொம்ப வித்தியாசமாய் சிந்தித்து தான் பழக்கம், இந்த படம் பார்த்து கொண்டு இருக்கும் போது அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியது,

சே என்னம்மா யோசிக்கிறாங்க என என்னும் போது, நம்மூரிலும் இதே கான்செப்ட் இல் ஒரு படம் வந்தது ஞாபகம் வந்தது (அந்த விவரம்  Spoiler Alert இல்)

படத்தை பார்க்க ஆரம்பித்த உடன் இது என்ன பேய் படமோ என்ற எண்ணமே வந்தது, நேரம் செல்ல செல்ல இது பேய் படமே தான் என்ற முடிவுக்கு வந்தேன், ஆனால் ரொம்ப technical details  லாம் இல்லாமல் என்ன செய்கிறார்கள் எதற்க்காக செய்கிறார்கள் என்று எளிதாய் புரிய வைத்து பார்வையாளனை கடைசி வரை கட்டி போட்டு விட்டார் இயக்குனர்

கதை:

ரோஸ் தன்னுடைய பாய் பிரென்ட் கிறிஸ் ஐ  பெற்றோரிடம் திருமணம் செய்வதற்காக அறிமுகப்படுத்த கூட்டி செல்கிறார் போகும் வழியில், போன பின்பு ரோஸின் காட்டு பங்களாவில் நடக்கும் அசம்பாவிதங்கள் கடும் திகிலை கிளப்புகின்றன,  அந்த காட்டு பங்களாவில் கிறிஸ் கண்டு கொண்டது என்ன, அவனுக்கு நேர்ந்தது என்ன என்பது தான் மீதி கதை


Spoiler Alert:

படம் பார்க்காதவர்கள் இந்த மஞ்சளிட்ட பகுதியை படிக்க வேண்டாம், இல்லை என்றால் ஒரு அருமையான thriller ஐ miss  செய்வீர்கள்

மனிதனுக்கு  ஆதியில் இருந்தே இறப்பின் மீது ஒரு அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது, இறப்பை தள்ளி போட, முடிந்தால் இறப்பே வராமல் இருக்க என்ன என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் மனித இனம் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது,

நீங்கள் என்பது என்ன? கேட்டால் நெஞ்சில் கை வைத்து சொல்வீர்கள், அனால் உண்மையில் நீங்கள் என்பது இதயம் அல்ல, கை, கால், முகம் கூட நீங்கள் அல்ல, நீங்கள் என்பது உங்கள் எண்ணங்கள் அதாவது மூளை மட்டுமே, எனவே உங்கள் மூளையை பிறருக்கு வைத்தால் (முடிந்தால்) அவர் உடலில் நீங்கள் தான் இருக்கீறீர்கள் என்று அர்த்தம்.  

இனி கதை:

கிறிஸ் உம்  ரோஸ் உம் ரோஸ் இன் காட்டு பங்களாவுக்கு வரும் வழியில் ஒரு மான் மீது கார் அடித்து விடுகிறது, ரோஸ் தான் கார் ஒட்டி வந்தாள் என்றாலும் போலீஸ் ஆபிசர் கிறிஸ் இன் தகவல்களை கேட்கிறார், அதற்கு ரோஸ் ஓவர் ரியாக்ட் செய்து தகவல் கொடுக்க விடாமல் செய்கிறாள்,


வீட்டுக்கு வந்த பின்பு கிரிஸ்க்கு வினோத சம்பவங்கள் நடக்கிறது, வீட்டு தோட்டக்காரன்  கிறிஸ் ஐ மதிக்காமல் பேசுகிறான், வீட்டு வேலைக்காரி சமயங்களில் வினோதமாக நடந்து கொள்கிறாள்,

கிறிஸ் இந்த காதலி ரோஸ் கிறிஸ் ஐ கூட்டி வருவதற்கு காரணம், ஒரு பெரும் பணக்கார கண் இழந்த சித்திர காரனின் மூளையை கிறிஸ் க்கு வைத்து, சித்திரக்காரனுக்கு இளமையான, கண்பார்வையுடன் உடலை தருவதே, 

ஒரு சமயத்தில் அந்த வீட்டிற்கு தான் அழைக்க பட்டு வந்ததற்கு காரணம் தன் உடலை அபகரிக்கவே என்று தெரிய வருகிறது, அதற்க்கு தன காதலி தான் திட்டமே போட்டாள்  என்று தெரிய வருகிறது, அதன் பின்பு அவர்களிடம் இருந்து கிறிஸ் தப்பித்தானா இல்லையா, அந்த தோட்டக்காரனும், வேலைக்காரியும் யார் (அது கடைசி 5 ஆவது நிமிடத்தில் தான் தெரிய வரும்) போன்ற விஷயங்கள் சுவாரசியமாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஆனால்  சில சந்தேகங்கள், 

1) மூளையையே மாற்றும் அறுவை சிகிச்சை நடக்கும் போது ஒரே ஒரு உதவியாளரை யா வைத்து கொள்வார்கள்?

2) காபி கோப்பையை தட்டி விடும் போது அது அதே சத்தமுடன்  தானே விழுகிறது, அப்போது கிறிஸ் க்கு ஒன்றும் ஆக வில்லையே ஏன் ?

இது போன்ற லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும் மொத்தத்தில் இது ஒரு நல்ல படம், 

நம் ஊரில் மாயவன் என்று ஒரு படம் வந்தது, இதே கான்செப்ட் இன்னும் technical  ஆக மிரட்டி இருப்பார்கள்











லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும் மொத்தத்தில் இது ஒரு நல்ல படம், திரில்லர் பட ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர்கள் (Rotten Tomato இல் 99%  பேர் விருப்பமாய் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் )

Director's  Cut  கிடைத்தால் பார்க்கவும் இரண்டு மூன்று முடிவுகள் உள்ளன, வெளியிட்ட முடிவே எனக்கு பிடித்து இருந்தது, இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கேள்வி

மொத்தத்தில் நிச்சயமாய் ஒரு முறை பார்க்கலாம், குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் (படுக்கை அறை காட்சிகள் சில உள்ளன).

வித்தியாசமான படம் பார்க்க வேண்டும் என்பவர்களை இந்த படம் நிச்சயமாக ஏமாற்றாது.

No comments: