Monday, February 2, 2009

தமிழ் சினிமாவில் அடிக்கடி கேட்கும் வசனங்கள்

சும்மா மேய்ந்து கொன்டிருந்த போது கண்ணில் பட்டது, தமிழ் சினிமாவில் அடிக்கடி கேட்கும் வசனங்கள், மறுமொழிகளையும் படியுங்கள் , பதிவை விட அதிகமாய் வசனங்கள்.


http://inru.wordpress.com/2009/01/30/fld/

நம்முடைய கற்ப்பனையும் கொஞ்சம் சேர்த்து:


1.ஆளாளுக்கு இப்படியே பேசிக்கிட்டு இருந்த எப்படி?.

2.கற்பழிச்சவனே அந்த பொண்ண கட்டிகிடனும்! இது தான் எட்டு பட்டிக்கும் சேர்த்து தீர்ப்பு .

3.வில்லன்: எவன் லே இந்த சிவா?. "அல்லது அந்த படத்தின் ஹீரோ பேர்".

4.ஆயரம் தான் இருந்தாலும் அவரு உன்ன பெத்தவருமா.

5.ஏய் அவன் உன்ன தாண்டி பாக்குறான்.

6.காதலன் காதலியிடம் : உனக்கு நான் முக்கியமா, இல்ல (அது, அவன் , அப்பா, அம்மா , வேலை ) முக்கியமா நீயே முடிவு பண்ணிக்கோ.

7.எனக்கு அப்பா அம்மா தான் முக்கியம் (இத யாரு சொல்லுவாங்க ன்னு சொல்லனுமா ?).

8. என் பொண்ண ரோட்ல போற பிச்சகாரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன் மகனுக்கு கொடுக்க மாட்டேன்.

9. ச்சி உனக்கு காதல பத்தி என்ன தெரியும்?.

10. உனக்கு சாவு என் கைய்யாள தாண்டா.

11. பூவ வெக்குற எடத்துல பொண்ண வெக்கனமுன்னு சொல்லுவாங்க (யாரு?).

12. எங்கள் காதல் புனிதமானது, தெய்வீகமானது,

13. ம்ம் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் (இது பழைய படத்துல தான் , இப்போ கதையே வேற).

தொடரும் :

No comments: