நம்ம அடிச்சா அதுக்கு பேரு மொட்ட,
அதுவா விழுந்தா அது சொட்ட.
--------------------------------------------------------
தண்ணி மேல கப்பல் போனா ஜாலி,
கப்பலுக்கு உள்ள தண்ணி போனா நீ காலி.
--------------------------------------------------------
உடம்புல எத்தனை செல் இருந்தாலும்,
அதுக்கு ஒரு சிம் கார்டு கூட போட முடியாது.
--------------------------------------------------------
கிரீம் பிஸ்கெட் ல கிரீம் இருக்கும்,
நாய் பிஸ்கெட் ல நாய் இருக்குமா?.
--------------------------------------------------------
ஒருத்தர் அவரோட "Birth Certificate" அ அவரே அப்ளை பண்ணி வாங்கலாம்,
ஆனா அவரோட "Death certificate" அ அவரே அப்ளை பண்ணி வாங்க முடியுமா?.
-- By "Death certificate" வாங்க முடியாமல் புலம்பும் ஆவிகள் சங்கம்.
--------------------------------------------------------
போர் குதிரை போருக்கு போகும்,
ரேஸ் குதிரை ரேஸ் க்கு போகும்,
வரி குதிரை வரி கட்ட போகுமா?.
-by நேர்மையாக வரி கட்டிவிட்டு ரிலாக்ஸ் அ யோசிப்போர் சங்கம்.
--------------------------------------------------------
ஒரு விளையாட்டு விளையாடலாமா?
நீங்க ரெண்டு வார்த்தை சொல்லணும்,
ஆனா அதுல "Minimum" 50 "Letters" ஆவது இருக்கணும்,
--
--
--
என்ன தெரியலையா?
அது "Post Box",
ஓகே ஓகே கூல்.. அழாதீங்க...
---
5 comments:
சிரிக்க வைக்கிறது. சுவார்ஸமான பதிவு
கடிச்சு தள்ளிட்டிங்களே!
சும்மா நச்சுனு ........................ பிளேடு போட்டுட்டீங்க
sema khadi.
வாங்க
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்,
வால்பையன்,
Suresh Kumar,
mangai,
Kripa.
வருகைக்கும் பின்னுட்டதிற்கும் நன்றி நன்றி
Post a Comment