Thursday, January 27, 2022

வெள்ளை சர்க்கரை உண்பதால் வரும் ஆபத்து / நோய்கள்

 வெள்ளை சர்க்கரை உண்பதால் வரும் ஆபத்து / நோய்கள்


Friday, December 24, 2021

பெரு வெடிப்பு - பிக் பேங் (Big Bang) தொடர், பாகம் 1

பெரு வெடிப்பு அல்லது ஆங்கிலத்தில் பிக் பேங் (Big Bang) எப்படி தோன்றியது? 
அதற்கு முன்னால் என்ன இருந்தது?  எதில் இருந்து இது தொடங்கியது? 


இது போன்ற கேள்விகள் அறிவியலாளர்களின் மனதில் எப்போதும் இருந்து கொண்டு இருக்கும் விடை தெரியா தீராக்கேள்விகளுள் ஒன்று.

அடிப்படையில் பெரு வெடிப்பு எனப்படும் இந்நிகழ்வு தோராயமாக 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாக அறிவியல் முறைப்படி கண்டுபிடித்து உள்ளனர். 

சரி பெரு வெடிப்பிற்கு முன்னால் என்ன இருந்தது ?

பெரு வெடிப்புக்கு முன்னால் என்று ஒன்றுமே இல்லை, ஏன் ஏன்றால் இடமும் காலமும்  (Space and Time) இந்நிகழ்விற்கு பின்பே தோன்றின, இதை புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினம், சுஜாதா அவர்களின் ஒரு உதாரணம் சொல்கிறேன், 

ஒரு பல்லி, எரியும் மின்விளக்கை ஒரு நாள் அல்ல தன் வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொண்டு  இருந்தாலும் விளக்கின் உள் செயல் முறை அதற்கு எப்போதும் புரிய போவதில்லை, அது போல தான் நாம் இந்த பெரு வெடிப்பை அறிய முற்படுவது (நன்றி Mr .GK  Youtuber)
 
 
தொடரும்..

சொந்தக்காரர்கள் செய்யும் அரசியல் - 1

பொதுவாக இரண்டு மனிதர்களுக்கு மேல் ஓரிடத்தில் இருந்தாலே அங்கு அரசியல் கண்டிப்பாக இருக்கும், அதிலும் சொந்தங்களில் சிலர் முனைவர் பட்டம் வாங்கும் அளவுக்கு இதில் கரை தேர்ந்து இருப்பர்.

"சொந்தக்காரர்கள் செய்யும் அரசியல்" இது ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் அளவிற்கு பேசு பொருள் உள்ள தலைப்பு, 

பிறந்த குழந்தையை பார்க்க வருபவர்கள் தவறாது செய்யும் காரியம், குழந்தை யார் ஜாடை என்று ஆராய்வது தான், ஆண் குழந்தை எதிர்பர்த்து ஏமார்ந்து  நிற்கும் அத்தையிடம், குழந்தை அவங்க அம்மா ஜாடை அப்படியே உ ரிச்சி  வெச்சி இல்ல என்று ஆரம்பித்து விட்டு போனால் தான்  இரவு தூக்கமே இவர்களுக்கு.

அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என ஒரு குழந்தையிடம் கேட்டு வீட்டில் யாரோ ஒருவரின் காதில் புகை வரவழைப்பதில் இவர்கள் கில்லாடிகள்,

அதிலும் சில குழந்தைகள் இவர்களுக்கே "Tough" கொடுக்கும் விதமாக ரெண்டு பேரையும் பிடிக்கும் என "Counter' கொடுத்தால், இவர்கள் முகம் போகுப் போக்கு இருக்கிறதே.....

ஒருவன் சம்பளம் எவ்வளவு வாங்குகிறான் என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் இவர்களுக்கு, தன் வீட்டு பிள்ளையின் சம்பளதோடு ஒப்பிட்டு பார்ப்பதில் அவ்வளவு இன்பம், ஆனால் சிலர் வேண்டுமென்றே அதிகமாய் சொல்லி இவர்கள் வயிற்ரெரிச்சலை அதிகப்படுத்துவர்.

தான் நல்ல பெயர் வாங்குகதற்காக இவர்கள் செய்யும், சொல்லும் அத்தனையும் "வேற லெவல்", அதுவும் நெருங்கிய சொந்தங்களுள் போட்டு கொடுக்கும் நேர்த்தி, யோசிக்கும் திறமை எல்லாம் வேற எதுக்காவது பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் இந்தியா வல்லரசு ஆகி இருக்கும்,


சிலர் அவனை ஒயின் ஷாப்பில் பார்த்தேன் என்று வீட்டில் பற்ற வைப்பங்க, உங்களுக்கு அங்கே என்ன வேலை என்றாலும் பதில் தயாராக இருக்கும் நான் சும்மா side dish சாப்பிட தான் போனேன் னு கூசாமல் சொல்லுவாங்க, ஏன் அவனும் சும்மா side dish சாப்பிட போய் இருக்க லாம் அல்லவா?



தொடரும்...


Thursday, April 9, 2020

இந்த 21 நாட்கள்.

இந்த 21 நாட்கள். 

நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். 

அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை,

காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம். 

சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை.

 பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளை கண்களால் பார்க்க முடிகிறது.

 அடிதடி வெட்டு குத்து குறைந்து இருக்கிறது.

 மதுக்கடை மூடிக் கிடைக்கிறது. 

நகைக் கடைகள் பூட்டியே இருக்கிறது.

 ஜவுளிக்கடை விளம்பரங்களே செய்வதில்லை.

 நிரம்பி வடியும் மாநகரப் பேருந்துகள் இல்லை.

 படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை. 

தெருவெல்லாம் சுத்தமாய் கிடக்கிறது. சாக்கடைகள் தூர்வாரப் பட்டுக்கொண்டே இருக்கிறது. 

அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள். 

அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை.  எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம். 

தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை. 

காவல் துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். 

மருத்துவரை தெய்வமாய் பார்க்க முடிந்திருக்கிறது. 

செவிலியரை சகோதரியாய் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். 

சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறோம்.

 சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.

சிட்டு்குருவி சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன.

 பறவைகள் சப்தம் பலமாய் கேட்க முடிகிறது.

 பொழுது சாயும் போது எந்த இரைச்சலும் இல்லை. 

நீ எப்படி வருவயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை. 

போதை தேடி யாரும் செல்வதே இல்லை. சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை.

தெருவில் எட்சில் துப்ப யோசிக்கிறோம்.

 வெளிநாட்டில் இருந்து வந்ததை வெளியில் சொல்ல யோசிக்கிறோம். 

அகந்தை அழிந்து போய் இருக்கிறது. தான் என்ற கர்வம் தளர்ந்து போய் விட்டது. 

சிறுவயது நியாபகங்களை அசை போட துவங்கி இருக்கிறோம். 

தொட்டதிற்கு எல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தி இருக்கிறோம். 

சிரிக்க கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

 சிந்திக்க பழகி இருக்கிறோம்.

 மற்றவர்கள் வழி புரிந்து இருக்கிறது

. மனது நோகாமல் பேச பழகி இருக்கிறோம். 

இது மட்டும் போதாது, அப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள்.

 அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள்.

 பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுங்கள்.

 மனைவியின் மனதிற்கு நெருக்கமாக இருங்கள்.கணவரின் கைகளை பிடித்து நம்பிக்கை கொடுங்கள். 

பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள்.

 மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுங்கள். 

யாரையாவது மன்னிக்க நினைத்தால் மன்னித்தும் விடுங்கள்.

ஒருவேளை இந்த 21 நாட்களோடு உலகம் அழிந்து போவதாய் இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்பீர்களோஅப்படி நேசித்து பாருங்கள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை தெரியாது.எதிர் வீட்டுகாரரின் ஏமாற்றம் புலப்படாது. எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என்று மனம் நினைக்கும். வஞ்சம் தோன்றாது. வாழ வேண்டும் என்ற ஆசை நீண்டு இருக்கும் . வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும். 

மீண்டும் தொடங்குங்கள் எங்கு எந்த தவறை செய்தீர்களோ, அதை திருத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளதென்று புலம்பாதிருங்கள், வீடே இல்லாதவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள். நீங்கள் யரென்பதை உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டு இருக்கிறது. உங்களை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை. தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

 வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும் ரி ஸ்டார்ட் ஆப்ஷன் யை கொடுப்பதில்லை. 

இப்போ சொல்லுங்க இது வரமா? சாபமா? 

 நிச்சயமாக வரம் தான் வாழ்ந்து தான் பார்ப்போமே.........

#வாட்சாப் பார்வார்ட்

#WhatsappForward, 

Quarantine Thoughts

Interestingly written: This quarantine is probably God's way of accepting a ton of wishes:

1. Kids: I wish we had no school and play all day - Done

2. Women: I want the undivided attention of my husband- Done

3. Husbands: I'm sick of this traffic, I wish I could work from home. Done

4. Working Moms: I wish I could spend some quality time with my kids and read Done

5.Students: I wish I had no  exams? - Done

6. Old Parents: I wish our kids could spend more time with us rather than being busy everyday - Done

7. Employee: I'm slogging too much, need a break.- Done

8. Employers:  I have no life of my own, I wish could relax Done

9. Mother Earth: I cant breathe,  I wish I could get a break from all this pollution and chaos... Done

Yet we all complain- Beware what you wish - You might just get it! 😊

#WhatsappForward