Tuesday, March 31, 2009

Sunday, March 29, 2009

11 H வாசகம்:

11 H பேருந்தில் கண்ட வாசகம்:

Learning , Studying என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது,

Sleeping , Playing என்று சொன்னால் உதடுகள் கூட ஓட்டும்.


---

Thursday, March 26, 2009

வைரஸ் பாதித்த மௌஸ்

என் கம்ப்யூட்டர் மௌஸ் அளவுக்கு அதிகமான வைரஸ் தாக்குதலால் இப்படி ஆகி விட்டது.





---

Friday, March 20, 2009

கொல் மை

என்னை கொல்வதற்கு உன்

பார்வை மட்டும் போதுமே

எதற்காக அதில் விஷம்

தடவுகிறாய்?..

கண்ணுக்கு மைபூசும்


தன் காதலியை பார்த்து காதல் எழுதிய கவிஞன்..

சுதனின்விஜி.


---

Tuesday, March 17, 2009

கைபேசி தத்துவம் :

Mobile ல SIM அ போடலன்னா "Insert SIM" ன்னு வரும்,

ஆனா

Battery போடலன்னா "Insert Battery" ன்னு வருமா,

BY


அதிகமா charge ஏத்தி யோசிப்போர் சங்கம்.


---

காதலும் கழுதையும்:

கழுதையை பார் யோகம் வரும்,

காதலித்து பார் சோகம் வரும் ,

by


இரண்டையும் பார்த்தவர்கள் சங்கம்.


---

சொல்வதற்கு ஒன்றுமில்லை :

படத்தை சொடுக்கி பெரிதாக பார்க்கவும்.






---

Monday, March 16, 2009

பூ விமர்சனம்:

தினமலர் விமர்சனம்

விவரம் தெரியும் வயதிற்கு முன்பே, தன் தாய் மாமா தங்கராசு மீது இனம் புரியாத பாசம் கொண்ட கதாநாயகி மாரி, விவரம் தெரிந்த பின் அதை காதலாக கண்டு கொள்கிறார். ஆனால் சில- பல காரணங்களால் தங்கராசு - மாரியின் காதல் கைகூடாமல் போக, இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் திருமணம் நடக்கிறது.

திருமணத்திற்கு பின்பும் தங்கராசு மீது தான் வைத்திருக்கும் பாசத்தை குறைத்துக் கொள்ளாத மாரி தங்கராசை காண ஊர் திருவிழா நாள் ஒன்றை சாக்காக வைத்து ஊருக்கு வருகிறார். வரும் வழியில் தங்கள் காதலுக்கு சாட்சியான இரட்டை பனை மரங்களின் நிழலில் நினைவுகளில் மூழ்கியிருக்கிறார். அந்த நினைவுகளுடனேயே தங்கராசு மாமாவை கான அவர் வீடு நோக்கிப் போகும் மாரி, அங்கு காணும் காட்சிகள்தான் க்ளைமாக்ஸ்.

இன்ஜினியரிங் படிக்க போகும் மாமா மகனை ஊரில் பட்டாசு கம்பெனியில் வேலை பார்ககும் மாரி காதலிக்கிறார்... என்றதுமே அது கைகூடாது என்பதை முடிவு ‌செய்துவிட முடிகிறது. அதற்கும் முன்பாகவே அவரும் பலசரக்கு கடைக்காரரும் குடும்பம் நடத்தும் காட்சி காட்டப்படுவதால் கதையை யூகித்து விடமுடிகிறது என்றாலும் தன் கதலை தங்கராசு துறந்ததற்கான விஞ்ஞான ரீதியான காரணங்கள் வித்தியாசம். பனை மரத்துடனான மாரியின் நேசம், கள்ளிப்பழ ஞாபகங்கள், தன் தங்கராசை பற்றி தப்பாக பேசியதால் உற்ற தோழியின் மண்டையையே பிளந்து விடும் மாரியின் கோபம், தங்கராசை காதலனாக பார்ககும் காட்சிகளில், காதலையும், மாற்றானுக்கு மாலையிட்ட பின்னும் அதே மாமன் மகனுடன் பாசம் காட்டுவது என அத்தனையும் தத்ரூபம் மாரியாக வரும் பார்வதி முதல் படத்திலேயே மிளிர்ந்திருக்கிறார். பல கட்சிகளில் பார்வதியின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. தமிழ் சினிமாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல நடிகை கிடைத்திருக்கிறார். புதுமுகம் பார்வதி பூ மாதிரியாகவே வாழ்ந்திருக்கிறார். சபாஷ்...!


பார்வதியின் மாமன் மகன் தங்கராசுவா ஸ்ரீகாந்தும் நன்றாக நடித்திருக்கிறார். சிவகாசியில் இருந்து சென்னைக்கு போய் இன்ஜினியரிங் படித்தாலும், படிக்கும் போதும், படித்து முடிக்கும்போதும் கிராமத்து மனம் மாறாத இளைஞராகவே நடித்து நம் மனதை கவர்கிறார். ஸ்ரீகாந்த் இந்த படத்தை தைரியமாக தான் நடித்திருக்கும் படம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

புதுமுகம் பார்வதி, ஸ்ரீகாந்த் மாதிரியே பார்வதியின் தோழியாக வரும் ஒன்பது ரூபாய் நோட்டு இன்பநிலாவும் நடிப்பு திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ஸ்ரீகாந்தின் அப்பாவாகவும், வண்டிக்காரராகவும் வரும் பேனாக்காரர், பிரமாதமாக நடித்திருக்கிறார். அந்த பகுதியிலேயே மாட்டு வண்டிக்காரர்களில் பேனா பிடித்து எழுதத் தெரிந்தவர் என்பதால் தன்னை பேனாக்காரர் என்று அழைக்க ‌வேண்டும் என்று விரும்புவதும், ஒரு கட்டத்தில் இதற்காக வேலையை விட்டு விலகுவதும் ரசிக்க வைக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கவுரவத்துக்குரியவர் மகனை காசுக்காக முதலாளி மகனை கட்டிக்கச் சொல்வது அபத்தமாக இருக்கிறது.

புதியவர் எஸ்.எஸ்.குமரனின் இசையில் சூ.. சூ.. மாரி, மாமன் எங்கிருக்கா, ஆவாரம்பூ, சிவகாசி ரதியே உள்ளிட்ட பாடல்களில் இசையும், பின்னணி இசையும் இனிமை..! இளமை! ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவும், எடிட்டர் மதன் குணதேவாவும்ல இயக்குனர் சசிக்கு பெரிய பலம். இயக்குனர் சசி சொன்னது போன்றே சினிமாவுக்கு நாவலை கடந்தும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் என்றால் மிகையல்ல.

தமிழ் சினிமாவின் ச்சீ, த்தூ, ப்பூ படங்களுக்கு மத்தியில் பூ எல்லோராலும் ஓ போட்டு பாராட்டப்பட வேண்டிய யூ படம்.

பூ - வாவ்

*****

விகடன் விமர்சனம்


கந்தகப் பூவின் கதை!

ஆண்களின் "ஆட்டோகிராஃப்' மட்டுமே சொல்லப்பட்ட தமிழ்த்திரையில், முதன் முதலாக ஒரு பெண்ணின் காதல் நினைவுகளை, கள்ளிப்பழ வாசத்துடன் மலர விட்டதற்காக இயக்குனர் சசிக்கு, நம்பிக்கை தரும் படைப்பாளிகளின் வரிசையில் ஒரு நாற்காலி!

வெக்கையடிக்கும் கரிசல் பூமியில், "வெடியாபீஸில்' வேலை பார்க்கும் கிராமத்துப் பெண் மாரியம்மா. "பெரியவளானதும் என்னவாகப் போற?'' எனக்கேட்கும் வாத்தியாரிடம், "தங்கராசுக்குப் பொண்டாட்டியாகப் போறேன் சார்' என்கிற அளவுக்கு மாமா மகன் மீது மருகும் காதல். வெடிமருந்து, கள்ளிப்பழம், அரை குயர் நோட்டு, ஆட்டுக்குட்டி எனத் தனக்குப் பரிச்சயமான அனைத்திலும் அவளுக்கு தங்கராசுவின் ஞாபகம். சென்னைப் பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவனான தங்கராசு, சந்தர்ப்பவசத்தால் அப்பாவின் முதலாளி மகளையே மணக்க நேரிடுகிறது. மாரியும் அவள் அடைகாத்த காதலும் என்னவாச்சு என்பதே மிச்சமுள்ள க(வி)தை.

ச.தமிழ்ச்செல்வனின் "வெயிலோடு போய்...' சிறுகதையை, செல்லுலாய்டில் விதைத்திருக்கிறார் சசி. கிராமத்துப் படம் என்றால் வன்முறைக் காட்சிகளும், திருவிழாக் குத்துப்பாட்டும் இருக்க வேண்டும் என்கிற முந்தைய இலக்கணங்களை உடைத்தது முதல் அழகு. படம் முழுக்க அன்பால் நிறைந்த மனிதர்களைக் காட்டி செல்லும் விதத்தில், ஆரோக்கிய சினிமாவுக்கு இது இன்னொரு அடிக்கல்.

கதை நெடுக வியாபித்து, மாரியம்மாள் என்னும் ஏழைப் பெண்ணாகவே எளிமையில் மிளிர்கிறார் பார்வதி. "என் தங்கராசுவுக்கு நான் என்ன செஞ்சாலும் அழகுதான்' என்கிற வெட்கத்தில், "ஆசை முத்தம்தான் தர முடியலை. தோசை முத்தமாச்சும் தர்றேன்'' என்கிற ஆசையில், காதல் தோல்வியிலும் "கறுப்புக் குட்டீசுஈஈ!'' என ஆட்டுக்குட்டியை தூக்கி கொஞ்சும் தவிப்பில், நள்ளிரவில் கள்ளிப்பழம் தேடிப் போகையில்... குடுகுடுப்பைக்காரரைக் கண்டு நடுங்கும் மிரட்சியில்... முக பாவனைகளில் இத்தனை உணர்ச்சிகளை காட்டும் நடிகையைப் பார்த்து எத்தனை காலமாயிற்று!

தம்மாத்துண்டு கேரக்டரில் ஸ்ரீகாந்த். பாதிப்படம் ஓடிய பிறகே அறிமுகமாகிற ஹீரோ கேரக்டரைக் கதையின் கனத்துக்காக ஒப்புக் கொண்டதற்காகவே ஸ்ரீகாந்த்துக்கு கை குலுக்கலாம். ஆனால், அவரது பேச்சு மொழியும், உடல் மொழியும் அசலான கிராமத்து மனிதர்களுக்கு மத்தியில், அந்நியமாகவே நிற்கிறது. கேமரா வெளிச்சத்தை முதன் முதலில் பார்க்கிற மனிதர்கள், நடிப்பில் பிரமாதப்படுத்தி விட்டனர். பேனாக்காரராக வரும் ராமு. புழுதிக்காட்டு தகப்பன்சாமிகளின் மன உணர்ச்சிகளை அப்படியே கொண்டு வந்ததில் இயல்பான நடிப்புக்காரர்.

தங்கை மீதுள்ள பாசத்தை மிகைப்படுத்தாமல், யதார்த்த அண்ணனாக ஆர்ட் டைரக்டர் வீரசமர்,"அலோ' டீக்கடைக்காரர் கந்தசாமி. "வெடியாபீஸ்' ஃபோர்மேன் கண்ணன், மாரியின் அம்மா ஜானகி, மாரியம்மாளின் தோழி சீனியாக இன்பநிலா, பார்வதியின் கணவனாக இனிகோ என அத்தனை கேரக்டர்களிலும் மிளிர்கிறது எளிமையும் இயல்பும். இந்த யதார்த்தம் சின்ன வயது மாரியம்மாளாக வரும் மயிலா வரை நேர்த்தியாகப் பொருத்துவது இயக்குனரின் மெனக்கெடலுக்கு சாட்சி.

"பெருசானதும் என்னவாகப் போறீங்க?'' என்ற பள்ளிக்கூட வாத்தியார் கேள்விக்கு, "சர்பத் கடை வைப்பேன் சார்', டக்கர் டைவராவேன் சார்' என பையன்கள் பதில் சொல்ல, எந்தப் பதிலும் சொல்லத் தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர் பெண் குழந்தைகள். "எதிர்காலத்துல என்னவாகப் போறோம்னு தெரியாமலேயே வளருதுங்களே பொம்பளைப்புள்ளைங்க' என்ற ஆசிரியரின் விசனக் குரலில் வெளிப்படுகிறது சசியின் சமூக அக்கறை.

கிராமத்துப் படம் என்றாலே அங்கொரு டீக்கடை. அதில் காமெடி என்கிற கிளிஷே இதிலும் உண்டு. அதே போல் பணக்கார வீட்டுப்பெண் என்றாலே, கால் மேல் கால் போட்டு இங்கிலீஷ் புக் படிப்பதும், புருஷனை கேவலமாக திட்டுவதுமாக அலுப்புப் புளிப்பு. அவ்வபோது எட்டிப்பார்க்கும் ஹீரோயினின் "கறுப்பு மேக்கப்', பரவை முனியம்மாவின் திணிக்கப்பட்ட பாடல், கொய்யாக்காய் ஷாட், ஃபோர்மேனின் தன்னிலை விளக்கம் எல்லாம் பூவில் நெருடும் முள்கள்.

விற்கப்பட்ட பழைய ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு பார்வதி நிற்கும் இடத்திலேயே படம் முடிந்துவிடுகிறதே. அதற்கடுத்தும் ஸ்ரீகாந்த் கஷ்டப்பட்டு, பார்வதி அழுது என பூவை இழுத்துத் தொடுத்திருக்கிறார்கள். இசையமப்பாளர் எஸ்.எஸ். குமரன் தமிழுக்கு இனிய இசை வரவு. "ச்சூ ச்சூ மாரி', "மாமன் எங்கிருக்கான் ஆக்காட்டி' பாடல்கள் கரிசல் ஈரம்.

வெடித்துக்கிடக்கும் கரிசல் நிலம், மொட்டை வெயிலில் மோனத்தவமிருக்கும் பனை மரங்கள், நடுநிசியில் சிவப்பாகப் பூத்துக்கிடக்கும் கள்ளிப்பழங்கள், பொடிசுகளின் விளையாட்டில் சிதறிக்கிடக்கும் சோளக்கதிர்கள் என கேமராவில் கிராமத்தின் உயிரைக் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தரும் இன்னொரு இளைஞர்.

நல்ல இலக்கியத்தைத் தரமான, சுவாரஸ்யமான சினிமாவாக்க முடியும் எனக்காட்டிய விதத்துக்கு ஒரு பூங்கொத்து!

விகடன் மார்க் 44/100


*****

குமுதம் விமர்சனம்

முறைப்பையன் தங்கராசுவை பார்வதி காதலிக்கிறாள். காத்திருக்கிறாள். கசிந்துருகி கதறுகிறாள். இதுதான் கதை.

"அந்தப் புள்ளை பாவம்பா. சீக்கிரமா ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு கதைய முடிங்க'' என ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் புலம்பவிட்டு, "இதெல்லாம் தப்பு... சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறக்குற குழந்தை சுகவீனமாயிடும்''னு பிரசார நெடியுடன் முடிகிறது "பூ'. செம்மண் புழுதி படிந்த சிவகாசி மண்ணுக்கு, புதுமுகம் பார்வதி "பூ' மாதிரி சரியாகப் பொருந்துகிறார். படத்தின் ஆரம்பத்தில் வரும் மளிகைக்கடை காட்சிகளும், கணவன்-மனைவி அன்னியோன்யமும் "பளிச்'. குறிப்பாக, பார்வதிக்குக் கணவராக வரும் அந்த நபர், வெகுவாகக் கவர்கிறார்.

இயல்பான காட்சிகளைப் பார்த்து அடடே...' போட்டுக் கொண்டிருக்கும்போதே திடீரென ஒரு ரெட்டைப் பனைமரத்தை காண்பிக்கிறார்கள். திரைக் கதைக்கு முட்டுக்கட்டை அதுதான். ரெட்டைப் பனைமரம், கள்ளிப்பழம், சிறுவயதுக் காதல் அடப் போங்கப்பா... ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்சம் அழகி, கொஞ்சம் பருத்திவீரன் என பழைய பாதிப்புகள் எட்டிப்பார்த்து நம்மை நெளிய வைப்பது நிஜம்.

"கிராமத்துக் காதல்' என்ற ஒற்றை வரிக்கதையை மட்டும் நம்பாமல் பாத்திரங்கள் தேர்வு, அட்சர சுத்தமாக அவர்கள் பேசிக்கொள்ளும் வட்டார மொழி,உடலசைவுகள் என டைரக்டரின் உழைப்பு படத்திற்கு பக்கபலமாக அமைகிறது. குறிப்பாக கதாநாயகியின் அம்மா. "ஏண்டி அவ்ளோ தொலைவா வந்திருக்கியே சாப்பிட்டியாடி'' என்று கவலைப்படும்போதும், "அய்யோ சேலை எடுத்துட்டு வந்துட்டியாடி... நல்லாருக்குடி'' என முகத்தில் சந்தோஷம் காட்டும்போதும் நமக்கு கண்களில் குளம் கட்டுகிறது. யதார்த்தமான பாத்திரப் படைப்பு. ஹீரோயினுக்கு அண்ணனாக வருபவரும் அப்படியே. யாருப்பா அந்தப் பேனாக்காரர்? வண்டிக்காரர் வேடத்தில் சோக முகபாவம் காட்டி அசத்துகிறார்.

படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், பட்டாசு ஃபேக்டரி. பட்டாசு கம்பெனியில் வேலை செய்யும் ஏழைப் பெண்களின் மனஓட்டங்களை சரியாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநருக்கு ஒரு சபாஷ். கதாநாயகியின் தோழி, சூப்பர்வைசர் என கேரக்டர்கள் தேர்வில் சரியான கவனம்.

கதைக்கு ஒட்டாமல் ஓரமாக நிற்பது நாயகன் ஷ்ரீகாந்த் மட்டுமே. கிராமத்து வசன உச்சரிப்பில் இன்னும் கவனம் தேவை. இசை அறிமுகம் குமரன். "ச்சு மாரி', "வைகறை', "சிவகாசி' பாடல்களில் கிராமிய மணம் நன்றாக அவருக்கு கை வந்திருக்கிறது. வரவேற்கலாம். ஜீரணிக்கவே முடியாதது, தன் மீது பிரியமோ, தன் வாழ்க்கை மீது அக்கறையோ துளியும் இல்லாத மாமன் மகனிடம் நாயகி, அம்புட்டு ஆசை வைத்திருப்பது!

மாமனின் செல்போன் நம்பரை மறந்துவிட்டு நாயகி துடிப்பது, மாமன் பார்ப்பதற்குள் தன் உடலை பட்டாசு கம்பெனி சூப்பர் வைசர் பார்த்துவிட்டான் என்று வெடிப்பது, கடைக்கு ஊறுகாய் வாங்கப் போனாலும் தொட்டு கொள்ள தங்கராசு வேணும்னு விடலையாய் கேட்பது என உப்பு சப்பில்லாத காட்சிகளை கோர்த்து, அதை உன்னதமான... மறக்க முடியாத காதல்னு இயக்குநர் சொல்வது அவருக்கு காவியமாகத் தெரிந்திருந்தாலும் பார்ப்பவர்களுக்கு காமெடியாக தெரிகிறது.

பூ பாதி பூத்திருக்கிறது!


---

Friday, March 13, 2009

மரியாதை கிடைக்குமிடம்:

ஆசிரியர்: ஏன்டா college பக்கம் 20 நாளா வரல ?

மாணவன் : எங்க அப்பாதான் சார் "ஒரு எடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு " சொன்னார்.


---

Thursday, March 12, 2009

காக்காவும் காதலும்

காதல்ங்றது ஆயா சுட்ட வடை மாதிரி,

காக்கா மாதிரி எவனாவது தூக்கிட்டு போய்டுவான்,

நட்புங்றது அந்தஆயா மாதிரி எவனாலயும்

தூக்க முடியாது,

தூக்கவும் மாட்டான்,



---

Monday, March 9, 2009

மனதை தொடும் கலை

நீ மனதின் அடி ஆழத்தில் இருந்து பேசாத வரை

நீ யாருடைய மனதையும் தொட முடியாது

---

வெற்றி தோல்வி:

நீ வெற்றி பெற்றால் உலகம் உன்னை அறிந்து கொள்ளும்,

நீ தோல்வியுற்றால் உன்னை நீ அறிந்து கொள்வாய்

---