Wednesday, November 26, 2008

நடன மதிப்பெண்

ஆசிரியர் : உன்னை கணக்கு போட சொன்னா ஏன்டா டான்ஸ் (Dance) ஆடுறே?
மாணவன் : நீங்க தானே சார் ஸ்டெப்ஸ் க்கு (steps) மார்க் உண்டுன்னு சொன்னிங்க!!!
ஆசிரியர் : !!!!???

---

சாகும் வரை ???

யாரோ என்னிடம் கேட்டார்கள் உன்னுடனான நட்பு எப்போது முடியும் என ,
நான் அமைதியாகி விட்டேன் ஏன் என்றால் ஏன் இறப்பு எப்போது என்று தெரியாததால்!!!!


---

பிரிவுத்துயர்

இப்போது மழை பெய்கிறது, ஜன்னலை திறந்து வெளியே பார் ,
பெய்யும் மழைத்துளிகளை கணக்கெடு ஏன் என்றால் அதானை தடவை உன்னை நான் மிஸ் (பிரிவுதுயரடைகிறேன்) செய்கிறேன்.

---

புத்திசாலி

முதலாமனவர் : நீங்க குளிக்கும் போது குளிரா இருந்தா என்ன பண்ணுவிங்கோ?.
இரண்டமானவர் : நான் போர்வை போர்த்திக்கொண்டு குளிப்பேன்.
முதலாமனவர் : !!!!?????.
-----

ரயில் பெட்டியில் இருவர்

முதலாமனவர் : கொஞ்சம் இது என்ன ஸ்டேஷன் ன்னு பாத்து சொல்றீங்களா?
இரண்டமானவர் : (ஜன்னலை திறந்து பார்த்து விட்டு ) இது ரயில்வே ஸ்டேஷன் தான்
முதலாமனவர் : !!!!?????

Tuesday, November 25, 2008

சந்தேக ராமன்

அப்பாவுக்கு அறுபதனாயிரம்
மனைவிகள் இருந்தும்
சந்தேகம் இல்லை,
ராமனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்.

-கபிலன்.

Monday, November 24, 2008

வேண்டுதல்

நீதிபதி : சாமி தலையிலிருந்து கிரீடத்த ஏன் திருடினாய்

திருடன் : ஐயா ! சாமிக்கு "மொட்டை" போடுறதா வேண்டிகிட்டேன் அதான்!!

நீதிபதி : !!!!?????

Wednesday, November 19, 2008

வாழ்க்கை எனும் பயணம்

வாழ்க்கை என்றால் 1000 மேடு 999 பள்ளம்,கல்லு, முள்ளு இருக்கும் அதற்காக நீ கவலை படாதே ஒரு நல்ல பாட்டா (Bata) செருப்பு வாங்கி போடு போதும்.

by -- Bata கடையில் வேலை பார்ப்போர் சங்கம்


சாகும் வரை

மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது ஆனால் என் மரணம் பற்றி எனக்கு தெரியும் அது நான் உன்னை மறந்து விட்ட நொடி.

வாழ்வே கனவாக

விடியும் வரை தெரியாது நாம் காண்பது கனவு என்று ,
வாழும் வரை தெரியாது நாம் வாழ்வது யாருக்காக என்று

-

விடுகதை:

ஊரு இருக்கும் ஆனால் வீடு இருக்காது,
கடல் இருக்கும் ஆனால் தண்ணீர் இருக்காது,

அது என்ன?

..........................................................................

..........................................................................

..........................................................................

அது உலக வரைபடம்

உன் பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக்கொள்!!!!

விக்கல்

நான் நினைக்கும் போது எல்லாம் நீ விக்குவாய் என்றால், நீ இந்நேரம் விக்கியே செத்து இருப்பாய்!!!!!!!!

காலை வணக்கம் Good Morning

நீ என்பது ஒரு எழுத்து
நான் என்பது இரண்டு எழுத்து
அன்பு என்பது மூன்று எழுத்து
இன்பம் என்பது நான்கு எழுத்து
.......................................................
.......................................................
.......................................................
.......................................................
உனக்கு 'Good Morning' சொல்வது
என்பது என் தலை எழுத்து

Good Morning

கண் சிமிட்டும் நேரம்.

கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப்பட்டேன் அன்று,
கண் சிமிட்டும் நேரமாவது பார்த்து விட ஆசை படுகிறேன் இன்று.

உலகம் அழியும் நேரம்

முனிவர் : கடவுளே இந்த உலகம் எப்போது அழியும்.
கடவுள் : இந்த sms யாரு படிகிறாங்களோ அவங்க குளிச்சா தான் அழியும்.
முனிவர் : ஐய் ஜாலி அப்போ இந்த ஜென்மத்துல இந்த உலகம் அழியாது.

பூமியின் தவம்!!!

மழையை போல எப்பவாவது நீ என்னை நினைத்து கொள்வாய்,
ஆனால் பூமியை போல எப்போதும் உன் வரவை எதிர்பார்த்து நினைத்து காத்திருப்பேன்.

பிறந்த நாள் பரிசு

கணவன்: உன் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டும்?
மனைவி: வேற ஒன்னும் வேண்டாங்க ஒரு 'ring' போதும்
கணவன்: 'land line la' ya 'Cellula' ya
மனைவி: ???!!!!!!

ஆயுள்

என் ஆயுள் உள்ளவரை உன் அன்பு வேண்டும் ,
அல்லது உன் அன்பு உள்ள வரை என் ஆயுள் போதும்.

Friday, November 14, 2008

யாத்திரைப் பத்து

யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்
(தில்லையில் அருளியது - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607

அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611

பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612

சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614

திருச்சிற்றம்பலம்

மூலம் சைவம்.org

Wednesday, November 12, 2008

சோழன் கரிகாற் பெருவளத்தான்.

இறந்தோன் அவனே!
பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,
பருதி உருவின் பல்படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்;
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்
அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,
பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்துகட்டு அழித்த வேங்கையின்,
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.

போய் வா என் தோழியே

விகடனில் எப்போதோ படித்தது அருமையான ஒரு கவிதை (முழுமையானது அல்ல )
போய் வா என் தோழியே , உன்னை பற்றி எந்த புகாரும்மில்லாததால் வழி அனுப்பி வைக்கிறேன்.

.......................... ..........................
.......................... ..........................

.......................... ..........................
.......................... .......................... மறந்து விடுகிறேன்
.......................... .......................... மறந்து விடுகிறேன்

.......................... .......................... மறந்து விடுகிறேன்

ஆனால் நம் வாழ்க்கைக்காக நான் கொஞ்சிய வார்த்தைகளை
கூடத்தில் அரிசி கொத்தி கொண்டிருக்கும் அந்த கோழிகளுக்கு
போட்டு விட்டு அதை கொத்திதின்னுவதை கண்கலங்க பார்த்து கொண்டிருந்தாயே அதை மட்டும் மறப்பதற்கில்லை


(முழு கவிதையும் இருந்தால் யாரவது கொடுத்து உதவுங்கள் )

Tuesday, November 11, 2008

என் இதயம் இறந்து போனதை

குமுதத்தில் எப்போதோ படித்தது (சுமார் 10 வருடம் இருக்கும்)
(முழுமையானது அல்ல )

.........................
..........................
..........................

என் இதயம் இறந்து போனதை
மறந்தே தான் போனாயோ?

..........................
..........................
..........................

இறந்து போ!
இறந்து போ!
இறந்து போ!


(முழு கவிதையும் இருந்தால் யாரவது கொடுத்து உதவுங்கள் )

Monday, November 3, 2008

சுஜாதா

ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்
- சுஜாதா

கல்யாண்ஜி கவிதை

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.


- கல்யாண்ஜி (கல்யாண்ஜி கவிதைகள்)

நன்றி :http://yosinga.blogspot.com/

http://kalyaanji.blogspot.com/


(கல்யாண்ஜி கவிதைகள் : புதுமைப் பித்தன் பதிப்பகம், 7 முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை 600083- விலை- ரூ 100)

நகுலன் கவிதை

ஒரு கட்டு வெற்றிலை , பாக்கு
சுண்ணாம்பு , புகையிலை
புட்டி பிராந்தி
நண்பா …
இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு

- நகுலன்(கோட் ஸ்டாண்ட் கவிதைகள்)

கவிதைகள் from http://vadakaraivelan.blogspot.com/


நடன ஒத்திகை

37, 38 எனக்
கடந்து கொண்டிருந்தது வயது
முந்தைய நாள்
பள்ளி ஆண்டு விழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள்
தன் மகளைப் போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15 வயதிலிருந்து.
- நரன்
- உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.


வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

- நரன்
- உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.


காத்துக் கிடந்த பக்கங்கள்

உன் மேஜை மேல்
புத்தகமொன்று விரிந்து கிடக்கிறது
காற்றின் கரங்கள்
புதுப் புதுப் பக்கங்களாய் என்னைக்
காட்டிக் கொண்டிருக்கிறது உனக்கு.
முழுதுமாய் நீ
வாசித்து விடுவாயென்ற வேட்கையில்
வேகவேகமாய்ப் புரண்டு படுக்கையில்
முடிவதற்கு முன்பாகவே
சட்டென்று மூடி விடுகிறாய் என்னை.
மீண்டும் உன் மேஜை மேல்
அந்தப் புத்தகம் காத்துக் கிடக்கிறது
மின் விசிறியைப் பார்த்தபடி
மிச்ச அதன் பக்கங்களோடு.

-எஸ்.நடராஜன்
- தீராநதி அக்டோபர் 2008 இதழில்.


அவள் விகடனில் சில சமயம் அத்தி பூத்தாற்போல நல்ல கவி்தை கிடக்கும்.

தூரத்து அப்பா

குல்பி ஐஸ்காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது
பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்..
வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்.

-எம்.சுதா முத்துலட்சுமி
- அவள் விகடன் - 24 அக்டோபர் 2008

நன்றி

http://vadakaraivelan.blogspot.com/